கூகுளின் தாய் நிறுவனமான Alphabet, உலகம் முழுவதும் உள்ள 12,000 ஊழியர்களின் வேலைகளை குறைக்க முடிவு செய்துள்ளது.
இது அவர்களின் உலகளாவிய பணியாளர்களில் 06 வீதமாக இருப்பதாக கூறப்படுகிறது.
ஆட்சேர்ப்பு – கூட்டு நடவடிக்கைகள் – பொறியியல் மற்றும் உற்பத்தித் துறைகளில் உள்ள ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட உள்ளனர்.
இந்த தொழிலாளர்கள் அமெரிக்காவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் சிதறி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
Microsoft – Facebook – Twitter உள்ளிட்ட பல தொழில்நுட்ப நிறுவனங்களும் கடந்த சில நாட்களில் 10,000 பணிநீக்கங்களை அறிவித்துள்ளன.