ஆஸ்திரேலியாவில் பணவீக்கம் 1990க்குப் பிறகு அதிகபட்ச மதிப்பைப் பதிவு செய்துள்ளது.
தற்போது பணவீக்கம் 7.8 சதவீதமாக உள்ளது என்று புள்ளியியல் அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டின் கடைசி காலாண்டில், நுகர்வோர் விலைக் குறியீடு 1.9 சதவீதம் அதிகரித்துள்ளது.
2000 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர் தொடர்ந்து 04 காலாண்டுகளில் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பது இதுவே முதல் தடவையாகும்.
போக்குவரத்து, எரிசக்தி மற்றும் சில்லறை விற்பனைச் செலவுகள் கணிசமான அளவு அதிகரித்துள்ளமையே இந்த நிலைமைக்கு முக்கியக் காரணம் என புள்ளிவிபரப் பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்நிலையில், வரும் 7ம் தேதி நடைபெற உள்ள பெடரல் ரிசர்வ் வங்கி நிர்வாக குழு கூட்டத்தில் மீண்டும் பண வீதம் உயர்த்தப்படும் என பொருளாதார ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.