அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக் கிண்ணப் போட்டியில் பெண் ஒருவரை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலாவுக்கு கிரிக்கெட்டிலிருந்து கடும் தடை விதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கிரிக்கெட் தொடர்பான அனைத்து விடயங்களிலும் ஈடுபடுவதை தடை செய்யுமாறு இலங்கையின் சட்டமா அதிபர் வழங்கிய ஆலோசனையுடன் தனுஷ்கா வழக்கு முடியும் வரை தடை அமலில் இருக்கும்.
இலங்கை கிரிக்கெட் நிறுவனமும் தனுஷ்காவுக்கு தற்காலிக தடை விதித்துள்ளது.
கடந்த இருபதுக்கு 20 உலகக் கிண்ணப் போட்டிச் சுற்றுப்பயணத்தின் போது இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பான ஐவரடங்கிய குழு அறிக்கை அண்மையில் விளையாட்டு அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது.
பெண் ஒருவரை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டின் கீழ் தனுஷ்க குணதிலக்க கடந்த வருடம் நவம்பர் மாதம் 6 ஆம் திகதி சிட்னியில் கைது செய்யப்பட்டார்.
எனினும், வழக்கு முடியும் வரை அவர் நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்படமாட்டார்.