விக்டோரியா மாநில அரசு, பள்ளி நேரங்களில் மிகவும் பிரபலமான செயற்கை நுண்ணறிவு சேவையான ChatGPT ஐ மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன்படுத்துவதை தடை செய்ய முடிவு செய்துள்ளது.
அதன்படி, மாநில அரசின் கீழ் உள்ள அனைத்து பள்ளிகளின் சர்வர்களிலும் ChatGPT தடுக்கப்படும்.
இது ஒரு தற்காலிக நடவடிக்கை மட்டுமே என்றும், எதிர்காலத்தில் தடையை நீக்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் விக்டோரியா மாநில கல்வித்துறை தெரிவித்துள்ளது.
ChatGPTயை பயன்படுத்தி மாணவர்கள் தேர்வு மோசடியில் ஈடுபடுவார்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
நியூ சவுத் வேல்ஸ் – மேற்கு ஆஸ்திரேலியா – டாஸ்மேனியா மற்றும் குயின்ஸ்லாந்து ஆகிய இடங்களில் உள்ள பொதுப் பள்ளிகளில் ChatGPT ஏற்கனவே தடுக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், தெற்கு ஆஸ்திரேலியாவில் வகுப்பறைகளில் இதைப் பயன்படுத்துவதற்கு எந்தத் தடையும் இல்லை.