பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தலைமையிலான தேசிய அமைச்சரவை அடுத்த கூட்டத்தில் சுகாதாரத் துறைக்கு ஒதுக்கப்படும் தொகையை அதிகரிப்பது குறித்து முடிவெடுக்க முடிவு செய்துள்ளது.
கான்பராவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பிரதமர், Medicare தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து 21 பரிந்துரைகள் அடங்கிய நீண்ட அறிக்கை இன்று கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டதாக தெரிவித்தார்.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் நடைபெறவுள்ள தேசிய அமைச்சரவைக் கூட்டத்தில் சுகாதாரத் துறையில் உள்ள அனைத்துப் பிரச்சினைகளும் தீர்க்கப்படும் என நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.
கிட்டத்தட்ட 40 ஆண்டுகளில் Medicareல் இது மிகப்பெரிய மாற்றமாக இருக்கும்.
இன்றைய தேசிய அமைச்சரவைக் கூட்டத்தில் எரிசக்தி நெருக்கடி மற்றும் உள்நாட்டு வாக்கெடுப்பு குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.