Sportsடென்னிஸ் போட்டியில் இருந்து ஓய்வு பெறும் சானியா மிர்சா!

டென்னிஸ் போட்டியில் இருந்து ஓய்வு பெறும் சானியா மிர்சா!

-

இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா இம்மாதம் நடக்கும் ஒரு போட்டி தொடருக்கு பிறகு டென்னிசில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

சமீபத்தில் தனது கடைசி கிராண்ட்சிலாம் போட்டியாக ஆஸ்திரேலிய ஓபனில் விளையாடினார். அதில் கலப்பு இரட்டையர் பிரிவில் விளையாடிய சானியா மிர்சா-போபண்ணா ஜோடி இறுதி போட்டியில் தோல்வியை தழுவியது.

போட்டிக்கு பிறகு பேசிய சானியா மிர்சா உணர்ச்சிவசமாக காணப்பட்டார். இந்த நிலையில் சானியா மிர்சா அளித்த பேட்டியில் கூறியதாவது:

ஓய்வுக்கு பிறகு அடுத்த தலைமுறை வீரர்-வீராங்கனைகளுக்கு உதவ விரும்புகிறேன்.

இளம் வீரர்களை ஊக்கப்படுத்தவும், என்னால் முடிந்த உதவியை செய்யவும் விரும்புகிறேன். போட்டியில் வெற்றி பெற்றாலும், தோற்றாலும் நான் அதிக உணர்ச்சிகளை காட்டுவதில்லை. பொதுவாக என் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி கொண்டிருக்கிறேன்.

ஆனால் ஆஸ்திரேலிய ஓபன் போட்டிக்கு பிறகு நான் பேசிய போது மிகவும் உணர்ச்சிகரமாக இருந்தேன். கிராண்ட்சிலாம் போட்டியில் பங்கேற்பது இதுவே கடைசி முறை என்ற வகையில் அரை இறுதி போட்டியுடன் முடித்ததற்கு நன்றியுடன் இருப்பேன் என்று அவர் கூறினார்.

நன்றி தமிழன்

Latest news

ஆஸ்திரேலியாவில் மிகவும் பிரபலமாக பயன்படுத்தப்படும் விலங்கு பெயர்கள்

ஆஸ்திரேலியாவில் மிகவும் பிரபலமான செல்லப் பெயராக கிரவுன் வாக்களிக்கப்பட்டுள்ளது. இது பூனைகள் மற்றும் நாய்கள் இரண்டிற்கும் பிரபலமான பெயராக மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தேசிய செல்லப்பிராணி காப்பீட்டு நிறுவனமான...

காவல்துறையினருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் AFL வீரர்

ஆஸ்திரேலிய முன்னாள் கால்பந்து வீரர் ரிக்கி நிக்சன் தனது பேஸ்புக் கணக்கில் பதிவுகள் மூலம் காவல்துறையினரை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று காலை அவர் தனது...

மின்சார மிதிவண்டிகளை அதிகம் பயன்படுத்தும் குழந்தைகள் – உயரும் விபத்துக்கள்

ஆஸ்திரேலியாவில் மாற்றியமைக்கப்பட்ட மின்சார மிதிவண்டிகளைப் பயன்படுத்தும் குழந்தைகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளது. இந்த மிதிவண்டியை மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் ஓட்ட முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குயின்ஸ்லாந்து காவல்துறை...

ஹார்வர்ட் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களுக்கு தடையாக உள்ள டொனால்ட் டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், Harvard உள்ளிட்ட அமெரிக்க பல்கலைக்கழகங்களுக்கான நிதியைக் குறைக்கத் தயாராகி வருகிறார். வெள்ளை மாளிகை சமர்ப்பித்த கோரிக்கைகளின் பட்டியலை Harvard பல்கலைக்கழகம் நிராகரித்த...

ஹார்வர்ட் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களுக்கு தடையாக உள்ள டொனால்ட் டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், Harvard உள்ளிட்ட அமெரிக்க பல்கலைக்கழகங்களுக்கான நிதியைக் குறைக்கத் தயாராகி வருகிறார். வெள்ளை மாளிகை சமர்ப்பித்த கோரிக்கைகளின் பட்டியலை Harvard பல்கலைக்கழகம் நிராகரித்த...

உலகின் மிகவும் சக்திவாய்ந்த மனிதர்களில் ஒருவராக மாறிய ஆஸ்திரேலியர்

உலகின் 100 செல்வாக்கு மிக்க நபர்களில் ஒருவராக ஒரு ஆஸ்திரேலியர் பெயரிடப்பட்டுள்ளார். அந்த நபர் சுரங்க அதிபரும் பசுமை எரிசக்தி சாம்பியனுமான Andrew Forrest, அல்லது Twiggy...