Newsதுருக்கி, சிரியாவில் தொடரும் சோகம் - பலி எண்ணிக்கை 1,400ஐ தாண்டியது!

துருக்கி, சிரியாவில் தொடரும் சோகம் – பலி எண்ணிக்கை 1,400ஐ தாண்டியது!

-

துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தால் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,400ஐ கடந்துள்ளது.

துருக்கி-சிரியா எல்லையில் இன்று அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கியின் காசியண்டெப் மாகாணம் நுர்தாகி நகரில் இருந்து 23 கிலோமீட்டர் தொலைவில், உள்ளூர் நேரப்படி அதிகாலை 04:17 மணிக்கு சுமார் 17.9 கிலோமீட்டர் (11 மைல்) ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது ரிச்டர் அளவில் 7.8 ஆக பதிவானது. நிலநடுக்கம் ஏற்பட்ட அடுத்த 15 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் 6.7 ரிச்டர் அளவில் நில அதிர்வு ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நில அதிர்வால் துருக்கி மற்றும் சிரியாவின் எல்லைப்பகுதிகளில்ல் குடியிருப்பு கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. 

இந்த நிலநடுக்கம் இஸ்ரேல், லெபனான் போன்ற அண்டை நாடுகளிலும் உணரப்பட்டுள்ளது. அதிகாலையில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் கட்டிடங்களில் தூங்கிக்கொண்டிருந்த நூற்றுக்கணக்கான மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த நிலநடுக்கத்தில் சிக்கியவர்களை மீட்க துருக்கி – சிரியாவின் மீட்புக்குழுவினர் களமிறக்கப்பட்டு மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதேபோல் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி நாட்டிற்கு இந்தியா மீட்பு குழுக்களை அனுப்பி வைக்கவுள்ளது.  

இந்நிலையில், நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,400ஐ தாண்டியுள்ளது. இதேபோல் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது. 

நன்றி தமிழன்

Latest news

முதல் ராக்கெட் ஏவுதலுக்கு தயாராகியுள்ள ஆஸ்திரேலியா

விண்வெளிக்குச் சென்று எலோன் மஸ்க்கின் SpaceX உடன் போட்டியிடத் தொடங்கும் ஆஸ்திரேலிய நிறுவனத்தின் கனவுக்கான நேரம் தொடங்கிவிட்டது. ஆஸ்திரேலிய விண்வெளி மற்றும் உற்பத்தி வரலாற்றில் ஒரு மைல்கல்...

 3 ஆஸ்திரேலிய மாநிலங்களில் நிலவும் வரலாறு காணாத அளவு வறட்சி

இந்த ஆண்டு வரலாறு காணாத வறட்சி ஆஸ்திரேலியாவின் மூன்று மாநிலங்களை பாதித்துள்ளது. இந்த ஆண்டு விக்டோரியா மற்றும் டாஸ்மேனியாவின் சில பகுதிகள் கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக வானிலை...

வரலாற்றில் முதல் முறையாக லிபரல் கட்சியை வழிநடத்தும் ஒரு பெண்

ஆஸ்திரேலிய வரலாற்றில் லிபரல் கட்சியை வழிநடத்தும் முதல் பெண்மணி என்ற பெருமையை Sussan Ley பெற்றுள்ளார். அதன்படி, ஆங்கஸ் டெய்லரை எதிர்த்து லிபரல் கூட்டணியின் தலைமையை Sussan...

ஆஸ்திரேலியாவில் மருந்துகளின் விலை உயரக்கூடும் என அச்சம்

அமெரிக்காவில் மருந்துகளின் விலையை குறைக்கும் நோக்கில் ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாக உத்தரவில் கையெழுத்திடுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் மருந்துகளின் விலை உயரக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. திங்கட்கிழமை...

வரலாற்றில் முதல் முறையாக லிபரல் கட்சியை வழிநடத்தும் ஒரு பெண்

ஆஸ்திரேலிய வரலாற்றில் லிபரல் கட்சியை வழிநடத்தும் முதல் பெண்மணி என்ற பெருமையை Sussan Ley பெற்றுள்ளார். அதன்படி, ஆங்கஸ் டெய்லரை எதிர்த்து லிபரல் கூட்டணியின் தலைமையை Sussan...