துருக்கிய நிலநடுக்கத்தில் உயிரிழந்த அவுஸ்திரேலியர்களின் எண்ணிக்கை 03 ஆக அதிகரித்துள்ளது.
மெல்போர்னில் வசித்து வந்த 69 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளதாக அவரது உறவினர்கள் இன்று காலை சமூக ஊடகங்களில் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அப்போது அவர் தங்கியிருந்த கட்டிடம் தரைமட்டமாக்கப்பட்டு சடலம் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிராந்தியத்தில் இருந்த கிட்டத்தட்ட 80 அவுஸ்திரேலியர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார திணைக்களம் அண்மையில் அறிவித்தது.
கடந்த திங்கட்கிழமை நடந்த இந்த சோகத்தில் இறந்ததாக உறுதி செய்யப்பட்ட எண்ணிக்கை தற்போது 24,000ஐ தாண்டியுள்ளது.