Newsஇரண்டாவதாக மீண்டும் பறந்த மர்மப் பொருளை சுட்டு வீழ்த்தியது அமெரிக்கா

இரண்டாவதாக மீண்டும் பறந்த மர்மப் பொருளை சுட்டு வீழ்த்தியது அமெரிக்கா

-

அமெரிக்காவின் அலாஸ்கா வான்வெளியில் பறந்து கொண்டிருந்த மர்மபொருளை அமெரிக்க இராணுவம் சுட்டு வீழ்த்தியது.

இதனை தேசிய பாதுகாப்பு கவுன்சில் அதிகாரி ஜான் கிர்பி வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கடந்த சனிக்கிழமையன்று சீன உளவு பலூனை எப்-22 வை சுட்டு வீழ்த்திய பின்னர், ஆறு நாட்களுக்கு பிறகு இரண்டாவது முறையாக அமெரிக்க இராணுவம் இந்த மர்மமான பொருளை சுட்டு வீழ்த்தியுள்ளது. 

இது குறித்து வெள்ளை மாளிகை தேசிய பாதுகாப்பு கவுன்சில் ஊடக பேச்சாளர் ஜான் கிர்பி கூறியதாவது,

அந்த மர்ம பொருள் எங்கிருந்து வந்தது. அதன் நோக்கம் என்னவென்றெல்லாம் எங்களுக்கு இன்னும் உறுதியாகவில்லை. ஆனால் 40 ஆயிரம் அடி உயரத்தில் மர்ம பொருள் பறப்பது விமான போக்குவரத்துக்கு அச்சுறுத்தல் என்பதால் அதனை நாங்கள் சுட்டு வீழ்த்தினோம்.

ஜனாதிபதி ஜோ பைடன் உத்தவின் பேரில் நாங்கள் அதனை சுட்டு வீழ்த்தினோம். கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்க வான்வெளியில் பறந்த சீன உளவு பலூனைவிட இது அளவில் சிறியதுதான். 

இது ஒரு காரின் அளவில் தான் இருந்தது. இது அரசுக்கு சொந்தமானதா அல்லது ஏதேனும் கார்ப்பரேட் நிறுவனத்துக்கு சொந்தமானதா? அதன் நோக்கம் தான் என்னவென்பது இன்னும் உறுதியாகவில்லை’ என்றார்.

நன்றி தமிழன்

Latest news

பொது போக்குவரத்திற்கு பெரும் சிக்கலாக மாறியுள்ள மின்-பைக்குகள்

வாரத்தில் மின்-பைக்குகளால் ஏற்படும் தீ விபத்துகள் அதிகமாகி வருவதால், மாநில அரசுகள் பொதுப் போக்குவரத்தில் வாகனங்களைச் சுற்றியுள்ள சட்டங்களை மறு மதிப்பீடு செய்து வருகின்றன. மின்-பைக்குகள் மற்றும்...

வடக்கு NSW மாநிலத்தில் அதிகரித்துள்ள பனிப்பொழிவு 

வடக்கு நியூ சவுத் வேல்ஸின் சில பகுதிகளில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது, அதே நேரத்தில் மாநிலத்தின் பிற பகுதிகள் மழை மற்றும் காற்றினால் பாதிக்கப்பட்டுள்ளன. Coffs துறைமுகத்திற்கு மேற்கே...

Sturt நெடுஞ்சாலையில் மூன்று வாகனங்கள் மோதி விபத்து – ஒருவர் பலி

தெற்கு நியூ சவுத் வேல்ஸில் மூன்று வாகனங்கள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றும் ஒரு பெரிய நெடுஞ்சாலையும் மணிக்கணக்கில் மூடப்பட்டது. வெள்ளிக்கிழமை நண்பகல், வாகா வாகாவிலிருந்து...

மீண்டும் வெடித்த இந்தோனேசியாவின் Lewotobi Laki-Laki மலை

இந்தோனேசியாவின் Mount Lewotobi Laki-laki வெடித்து, 10 கிலோமீட்டருக்கும் அதிகமான உயரத்திற்கு சாம்பல் மேகத்தை வானத்தில் கக்கியுள்ளது. உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு 8:48 மணிக்கு எரிமலை...

மீண்டும் வெடித்த இந்தோனேசியாவின் Lewotobi Laki-Laki மலை

இந்தோனேசியாவின் Mount Lewotobi Laki-laki வெடித்து, 10 கிலோமீட்டருக்கும் அதிகமான உயரத்திற்கு சாம்பல் மேகத்தை வானத்தில் கக்கியுள்ளது. உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு 8:48 மணிக்கு எரிமலை...

இஸ்ரேலிய அதிகாரிகளின் மிருகத்தனமான நடத்தையை விவரித்த காசாவிற்கு உதவி பெற்ற ஆஸ்திரேலியர்கள்

காசாவிற்கு உதவிப் பொருட்களை ஏற்றிச் சென்ற கப்பலில் இருந்த இரண்டு ஆஸ்திரேலிய குடிமக்கள் இஸ்ரேலிய அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட பின்னர் நேற்று காலை சிட்னிக்குத் திரும்பினர். இஸ்ரேலிய...