Sportsரோஹித் சர்மா சந்தித்த மிகப்பெரிய அவமானம்!

ரோஹித் சர்மா சந்தித்த மிகப்பெரிய அவமானம்!

-

ஐபிஎல் 2022ன் லீக் ஆட்டங்கள் இன்றுடன் நிறைவடைகிறது. பிளே ஆப்பிற்கு குஜராத், லக்னோ, ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு அணிகள் தகுதி பெற்றுள்ளன.

நேற்று நடைபெற்ற மும்பைக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி தோல்வியை சந்தித்ததால் பிளே ஆப் போட்டியில் இருந்து வெளியேறியது. மும்பை அணி வெற்றி பெற்றதால் ஆர்சிபி 4வது அணியாக பிளே ஆப்பிற்கு தகுதி பெற்றுள்ளது. வரும் 25ம் தேதி எலிமினேட்டரில் லக்னோ அணியுடன் விளையாட உள்ளது.

5 முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணி இந்த ஆண்டு மிகவும் மோசமான ஒரு அணியாக விளையாடியது. தொடர்ந்து 8 போட்டிகளில் தோல்வியுற்று முதல் அணியாக பிளே ஆப்பில் இருந்து வெளியேறியது. தனது முக்கியமான வீரர்களை ஏலத்தில் எடுக்க தவறியது தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

இந்திய அணியின் அனைத்து வித கிரிக்கெட்டிற்கும் கேப்டனாக இருக்கும் ரோஹித் சர்மா இந்த ஆண்டு ஐபிஎல்-ல் கேப்டனாகவும், பேட்ஸ்மேனாகவும் சொதப்பி உள்ளார். ஐபிஎல் 2022-ல் 14 போட்டிகளில் மொத்தமாக 268 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். அதிகபடச்சமாக 48 ரன்களுடன் 19.14 சராசரியாக கொண்டுள்ளார்.

2008ம் ஆண்டில் இருந்து நடைபெற்று வரும் ஐபிஎல்-ல் இந்த ஆண்டு மட்டும் தான் ரோஹித் சர்மா ஒரு அரைசதம் கூட அடிக்காமல் இருந்து உள்ளார். இது ரோஹித் சர்மாவிற்கு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு டி20 உலக கோப்பை நடைபெற உள்ள நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் மோசமான பார்ம் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இருப்பினும், வரும் போட்டிகளில் மீண்டும் பேட்டிங்கில் பழைய பார்மிற்கு திரும்புவார் என்று ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

Latest news

Chrome அல்லது Android இயங்குதளத்தை விற்க முடியாது – அமெரிக்க நீதிமன்றம்

Chrome அல்லது Android இயங்குதளத்தை விற்க கூகிளை கட்டாயப்படுத்த முடியாது என்று அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கூகிள் தேடல் அதிகப்படியான அதிகாரத்துடன் ஏகபோகமாக செயல்படுகிறது என்று அமெரிக்க...

ஆஸ்திரேலியாவின் வேலைவாய்ப்புத் திட்டத்தில் Generative AI எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தும்?

ஆஸ்திரேலியாவில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்குப் பதிலாக, நாம் பணிபுரியும் முறையை மேம்படுத்துவதற்கு Generative AI உதவுகிறது என்பது தெரியவந்துள்ளது. Jobs and Skills Australia நடத்திய ஆய்வில், வணிகங்கள்,...

சீனாவின் வெற்றி கொண்டாட்டம் குறித்து டிரம்ப் கருத்து

சீனாவின் 80வது வெற்றி தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட சீன அதிபர் ஜி ஜின்பிங், அமெரிக்காவிற்கு எதிராக ஆட்சிக் கவிழ்ப்பு சதி செய்வதாக அமெரிக்க அதிபர்...

2025-26 நிதியாண்டில் அழைத்து வரப்படும் நிரந்தர குடியேறிகள்

2025-26 நிதியாண்டில் 185,000 நிரந்தர குடியிருப்பாளர்கள் கொண்டு வரப்படுவார்கள் என்று உள்துறை அமைச்சர் Tony Burke உறுதிப்படுத்தியுள்ளார். குடியேற்ற எதிர்ப்புப் போராட்டங்களுக்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு, இந்தப்...

சீனாவின் வெற்றி கொண்டாட்டம் குறித்து டிரம்ப் கருத்து

சீனாவின் 80வது வெற்றி தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட சீன அதிபர் ஜி ஜின்பிங், அமெரிக்காவிற்கு எதிராக ஆட்சிக் கவிழ்ப்பு சதி செய்வதாக அமெரிக்க அதிபர்...