Melbourneஇராசரத்தினத்தின் கதை

இராசரத்தினத்தின் கதை

-

தமிழாக்களுக்கு அநீதி நடப்பதும், நீதியை பரிபாலனம் செய்யும் மையங்கள், பாதிக்கப்பட்ட தமிழாக்களுக்கு பாரபட்சம் பார்ப்பதும் வழமையாக இலங்கையிலும் இந்தியாவிலும் நடக்கும் விஷயங்கள் தான்.

ஆனால், சுயாதீனமான நீதிப் பொறிமுறையை கொண்டிருப்பதாகவும், எந்த சாநாரண குடிமகனுக்கும் அநீதி நடக்காது நீதியை வழங்கும் யாப்பையும் நீதிக்கட்டமைப்பையும் கொண்டிருப்பதாகவும் மார்தட்டிக் கொள்ளும் அமெரிக்காவில், அதுவும் குடியேற்றவாசிகள் அதிகமா வாழும் நியூயோர்க் நகரில், அதுவும் பங்குச்சந்தை வாணிபத்தில் கொடி கட்டி பறந்த தமிழரான ராஜ் ராஜரத்தினத்திற்கு நடந்த அநீதியை புட்டு புட்டு வைக்கும், ராஜரத்தினத்தின் சுயசரிதைப் புத்தகம் தான்.

இலங்கையில் வசதியான குடும்பத்தில் பிறந்த ராஜ் ராஜரத்தினம், தனது பாடசாலைக் கல்வியை முதலில் இலங்கையிலும் பின்னர் இந்தியாவில் பாடசாலை விடுதியில் தங்கியும் தொடர்கிறார். ஒழுங்கு முறையான, கட்டுக் கோப்பான இந்தப் பாடசாலை விடுதி வாழ்க்கை தான் தன்னை பின்னாட்களில் அமெரிக்க சிறை வாழ்க்கையை வாழ்வதற்கு தனக்கு ஒரு பயிற்சிக்களமாக இருந்ததா ராஜரத்தினம் குறிப்பிடுவார்.

கொழும்பில் வாழ்ந்த ராஜரதரத்தினம் தனது பாடசாலை விடுமுறைக் காலங்களில் தனது மூதாதையரின் ஊரிற்கு சென்று, தனது தாத்தா பாட்டியுடன் கழித்த பொழுதுகளை இந்தப் புத்தகத்தில் பசுமையாக நினைவுகூர்வார். புத்தகத்தில் அவரது மூதாதையரின் ஊரை அவர் ஏனோ குறிப்பிடாமல் விட்டு விட்டாலும், அவர் குறிப்பிடும் அந்த ஊர் யாழ்ப்பாணமாக இருக்கக்கூடும் என்று அனுமானிக்க முடிகிறது.

ஒக்டோபர் 2009 இல், நியூயோர்க் பங்கைச் சந்தையில் Insider Trading மூலம் தவறாக இலாபம் சம்பாதித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில், ராஜரத்தினம் கைதாகி, Jurors கள் அடங்கிய நீதிமன்றத்தில் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டு, 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டார். அமெரிக்க வரலாற்றில் insider trading குற்றத்திற்கு அதிகளவான சிறைதண்டனை வழங்கப்பட்டது, ராஜ் ராஜரத்தினத்திற்கே.

2008 இல் நிகழ்த்த Global Financial crisis (GFC) அமெரிக்காவில் பாரிய பங்குச் சந்தை சரிவையும், Merryl Lynch, Goldman Sachs உட்பட பல அமெரிக்க நிதி நிறுவனங்களை திவாலாகியும் இருந்தன. அமெரிக்க நிதி நிறுவனங்களில் பல ஆண்டுகளாக நிலவிய சீர்கேடுகள் இந்த GFC இற்கு காரணம் என்ற தகவல்கள் வெளிவரத் தொடங்க, இந்த முறைகேடுகளை கண்டும் காணாமலும் இருந்த அமெரிக்க அரசு, அமெரிக்க மக்களின் கோபத்தை அடக்க ஓரு பலிக்கடாவைத் தேடியது.

இந்தப் பின்னனியில் தன்னையும் தனது Galleon நிறுவனத்தையும் எப்படி ஆட்சியில் இருந்த ஒபாமா நிர்வாகமும் அமெரிக்க நீதித்துறையும் பலிக்கடாவாக்கினார்கள் என்பதை ராஜரத்தினம் தனது Uneven Justice புத்தகத்தில் விரிவாக, விளக்கமாக, தரவுகளுடன், சுவாரசியமாக பதிவு செய்துள்ளார்.

ராஐரத்தினத்தின் தொலைபேசியை ஒட்டுக் கேட்க, நீதிமன்றில் FBI விண்ணப்பித்து அனுமதியும் பெறும். நீதிமன்றில் FBI சமர்ப்பித்த விண்ணபத்தில் பொய்களும் புரட்டுகளும் இருந்தது, ஆகவே அவ்வாறு ஒட்டுக்கேட்க அனுமதி வழங்கியது தவறு என்று ராஜரத்தினத்தினத்தின் insider trading வழக்கை விசாரிக்கும் நீதிபதி ஏற்றுக் கொள்வார். ஆனால், அந்த ஒட்டுக் கேட்ட பதிவுகளை வழக்கில் சாட்சியமாக ஏற்று, ஒலிக்க விடுவதில் தொடங்கும் ராஜரத்தினத்தின் வழக்கில் இருக்கும் முரண்நகைகள், ராஜரத்தினத்தின் வழக்கின் போக்கைப் பெரிதாக பாதிக்கும்.

இதை விடக் கொடுமை என்னவென்றால், அரச தரப்பில் வரும் சாட்சிகள் எல்லாம், அவரவர் செய்த insider trading குற்றத்திற்காக பிடிபட்டவர்கள். தங்களது கிடைக்கும் தண்டனையை குறைக்கவும் இல்லாமல் ஆக்கவும், ராஜரத்ததினம் வழக்கில் சாட்சிகளாக மாற அரசாங்கத்தால் டீல் பேசப்பட்டவர்கள்.

அமெரிக்க அரச சட்டத்தரணிகளும் ராஜரத்தினத்துடன் டீல் பேசுவார்கள். குற்றத்தை ஒப்புக் கொள்ளுமாறு அவருக்கும் அவரது குடும்பத்திற்கும் பல்வேறு அழுத்தங்கள் மிரட்டல்களை FBI கொடுக்கும். ஆனால் “இல்லை, நான் எந்த பிழையும் செய்யவில்லை, எனக்கு அமெரிக்க நீதித்துறையில் நம்பிக்கை இருக்கு” என்று விடாப்பிடியாக நின்று, பல கோடி டொலர்கள் செலவளித்து துணிந்து ராஜரத்தினம் நீதிக்காக சண்டையிட்ட கதையை இந்த புத்தகம் விபரித்து செல்கிறது.

Sussex பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்ற ராஜரத்தினம், MBA படிக்க Wharton பல்கலைக்கழகத்திற்கு வருகிறார். அப்போது தான் அவரை பங்குச்சந்தை வியாபாரம் ஈர்க்கிறது.

ராஜரத்தினம் வெற்றிகரமாக நடாத்திய Galleon Hedge Fund வியாபாரம் சும்மா இலேசுபட்ட வேலையல்ல. பங்குச்சந்தையில் சும்மா வாங்கி விற்பதை விட, சொந்தமாக Hedge Fund நடாத்தி, அதுவும் அமெரிக்காவில் வெற்றியீட்டுவது என்பது லேசுபட்ட வேலையல்ல.

Hedge Fund எப்படி இயங்குகிறது என்பதை சாமானியர்கள் மட்டுமல்ல, வியாரத்துறையில் படித்தவர்களிக்கே விளங்கிக் கொள்வது உண்மையிலேயே கடினம். அப்படியிருக்க, 12 சாமானியர்களைக் கொண்ட jury சபை அமைத்து, அவர்களை ராஜரத்தினத்தின் வழக்கைத் தீர்மானிக்க விட்டதும் அடிப்படைத் தவறு என்று ராஜரத்தினம் தனது புத்தகத்தில் வாதிடுவதில் நியாயம் இருக்கத்தான் செய்கிறது. Hedge fund அல்லது பங்குச்சந்தை செயற்படும் முறை அறிந்த experts இந்த jury panel இல் அமர்ந்திருந்தால், ராஜரத்தினத்திற்கு கிடைத்த தீர்ப்பு வேறுவிதமாக அமைந்திருக்கும்.

இதில் இருக்கும் இன்னொரு கொடுமை என்னவென்றால், ராஜரத்தினம் insider trading மூலம் இலாபம் சம்பாதித்தார் என்று அரசாங்கம் குற்றம் சாட்டிய AMC என்ற பங்கில், ராஜரத்தினத்தின் நிறுவனம் பல மில்லியன்கள் நட்டம் தான் அடைந்திருக்கும்.

ராஜரத்தினத்தின் கைதையும் வழக்கையும், ஒரு soap opera போலாக்கி, ஊடகங்களிற்கு வழக்கின் விபரங்களை leak ஆக்கி, வழக்கு நடந்து கொண்டிருக்கும் போதே, ராஜரத்தினத்தை வில்லனாக்கியதில், நியூயோர்க் பிராந்திய அரச Attorney ஆன இந்திய வம்சாவளியினரான Preet Bharara இன் நாடகங்களும் ராஜரத்தினம் வழக்கின் தீர்ப்பை வெகுவாக பாதித்து இருக்கிறது.
இதே Bharara தான் பின்னாட்களில் இந்திய இராஜதந்திரியான தேவானியின் வழக்கிலும் கேவலமாக செயற்பட்டு, இந்திய அரசின் கோபாக்கினைக்கு உள்ளானவர்.

கிளிநொச்சியில் இயங்கும் ஒரு அனாதை இல்லம் உட்பட இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் வாழும் மக்களிற்கு ராஜரத்தினம் அபரிதமான நிதி உதவிகளை செய்துள்ளார். குறிப்பாக 2004 டிசம்பர் 26 ஆம் நாளன்று இலங்கையை சுனாமி தாக்கும் போது, இலங்கையில் இருந்த ராஜரத்தினம், சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளிற்கு நேரடியாக சென்றும் பார்த்துள்ளார். பின்னர் அமெரிக்கா திரும்பி சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களிற்கு பல்வேறு நிதி உதவிகளை வழங்கியுள்ளார்.

ராஜரத்தினத்திற்கு வழங்கப்பட்ட 11 வருட சிறைத்தண்டனை, ஏழரை ஆண்டுக்காளாக குறைக்கப்பட்டு 2019 ஆம் ஆண்டில் அவர் விடுதலையானார்.

அண்மையில் Yarl IT Hub இன் வருடாந்த Zoom நிகழ்வொன்றில் ராஜ் ராஜரத்தினமும் கலந்து கொண்டார். யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்டு இயங்கும் Yarl IT Hub இற்கு ஆலோசகராக உதவிபுரியும் ராஜரத்தினம், Yarl IT Hub ஊடாக உருவாகிக் கொண்டிருக்கும் புதிய தொழில் முயற்சிகளில் ஒரு Angel Investor ஆக முதலீடும் செய்து வருகிறார்.

சரளமாக தமிழ் மொழி பேசும் ராஜரத்தினம், தமிழ் இளைஞன் ஒருவனின் புதிய software முயற்சியொன்றிலும் முதலீடு செய்துள்ளார். அந்த இளைஞனிற்கு வியாபரா உத்திகளில் ஆலோசனையும் வழங்கி வரும் ராஜரத்தினம், அவனுக்கு கொடுத்து இருக்கும் வாக்குறுதி என்னவென்றால் “நீ முப்பது பேருக்கு வேலை குடுப்பீ என்றால், என்ட முதலீடு எனக்கு தேவையில்லை” என்பதாகும்.

Yarl IT Hub இன் நிகழ்வில், தான் யாழ்ப்பாணத்தில் தனக்கு ஒரு வீடு கட்டிக் கொண்டிருப்பதாகவும், இனிவரும் காலங்களில் வருடத்தில் ஆறு மாதங்களாவது யாழ்ப்பாணத்தில் வாழ எண்ணியுள்ளமாகவும், ராஜரத்தினம் கூறியது விரைவில் ஈடேறும் என்று நம்புவோம். ராஜரத்தினத்தைப் போல, இலங்கையில் பிறந்து, புலம் பெயர்ந்து, தத்தம் துறைகளில் வெற்றியீட்டியவர்களின் மீள்வருகை யாழ்ப்பாணத்திற்கு மட்டுமல்ல, முழு இலங்கைக்கும் அத்தியாவசியமானது.

ஜூட் பிரகாஷ்
மெல்பேர்ண்

Latest news

மரண திகதியை துல்லியமாக கணிக்கும் AI செயலி

ஒருவரது மரணம் எப்போது நிகழும் என்பதையும் கணிக்கக்கூடிய டெத் கிளாக் எனப்படும் ஒரு செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், இந்த செயலி பயன்பாட்டுக்கு வந்தது என்னவோ கடந்த...

அவுஸ்திரேலியாவில் அணுசக்தி பயன்பாடு தொடர்பில் வெளியான அறிக்கை

ஆஸ்திரேலியாவில் அணுசக்தியைப் பயன்படுத்துவது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களைப் பயன்படுத்துவதை விட இரண்டு மடங்கு அதிகம் என்று சமீபத்திய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. Commonwealth Scientific and Industrial Research...

தனது சேவைகளை நிறுத்தியுள்ள Emirates Airlines

30 ஆண்டுகளுக்குப் பிறகு, Emirates ஏர்லைன்ஸ் ஆஸ்திரேலியா கண்டத்திற்கும் ஆசியா கண்டத்திற்கும் இடையிலான பிரபலமான விமானப் பாதையில் தனது சேவைகளை நிறுத்தியுள்ளது. அதனடிப்படையில், Emirates நிறுவனம் மெல்பேர்ண்...

குயின்ஸ்லாந்து ஆய்வகத்தில் இருந்து காணாமல் போயுள்ள வைரஸ் மாதிரிகள்

குயின்ஸ்லாந்து ஆய்வகத்தில் இருந்து ஒரு தொகுதி வைரஸ் மாதிரிகள் காணாமல் போனதை அடுத்து அவசர விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. தொற்று வைரஸ் மாதிரிகள் காணாமல் போனால் உடனடியாக அவசர...

பண்டிகை காலங்களில் சூப்பர் மார்க்கெட் திறக்கப்படும் நாட்கள் தொடர்பிலான தகவல்

இந்த பண்டிகைக் காலத்தில் ஆஸ்திரேலியா முழுவதும் ஒவ்வொரு சூப்பர் மார்க்கெட் சங்கிலியும் திறக்கப்படும் திகதிகள் மற்றும் நேரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. Woolworths, Coles மற்றும் ALDI பல்பொருள் அங்காடிகளில்...

கிறிஸ்மஸைக் கொண்டாட துணை இல்லாத தனி நபர்களுகள் தொடர்பில் வெளியான தகவல்

இந்த கிறிஸ்துமஸுக்கு கூட்டாளியை தேடுபவர்களுக்கு ஒவ்வொரு மாநிலத்திலும் அதிக எண்ணிக்கையிலான ஒற்றையர்களைக் கொண்ட நகரங்கள் அறிவிக்கப்பட்டன. ஆஸ்திரேலிய புள்ளியியல் தரவுகளின்படி, இது ஆஸ்திரேலியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திற்கும்...