Sportsரோஹித் சர்மா சந்தித்த மிகப்பெரிய அவமானம்!

ரோஹித் சர்மா சந்தித்த மிகப்பெரிய அவமானம்!

-

ஐபிஎல் 2022ன் லீக் ஆட்டங்கள் இன்றுடன் நிறைவடைகிறது. பிளே ஆப்பிற்கு குஜராத், லக்னோ, ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு அணிகள் தகுதி பெற்றுள்ளன.

நேற்று நடைபெற்ற மும்பைக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி தோல்வியை சந்தித்ததால் பிளே ஆப் போட்டியில் இருந்து வெளியேறியது. மும்பை அணி வெற்றி பெற்றதால் ஆர்சிபி 4வது அணியாக பிளே ஆப்பிற்கு தகுதி பெற்றுள்ளது. வரும் 25ம் தேதி எலிமினேட்டரில் லக்னோ அணியுடன் விளையாட உள்ளது.

5 முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணி இந்த ஆண்டு மிகவும் மோசமான ஒரு அணியாக விளையாடியது. தொடர்ந்து 8 போட்டிகளில் தோல்வியுற்று முதல் அணியாக பிளே ஆப்பில் இருந்து வெளியேறியது. தனது முக்கியமான வீரர்களை ஏலத்தில் எடுக்க தவறியது தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

இந்திய அணியின் அனைத்து வித கிரிக்கெட்டிற்கும் கேப்டனாக இருக்கும் ரோஹித் சர்மா இந்த ஆண்டு ஐபிஎல்-ல் கேப்டனாகவும், பேட்ஸ்மேனாகவும் சொதப்பி உள்ளார். ஐபிஎல் 2022-ல் 14 போட்டிகளில் மொத்தமாக 268 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். அதிகபடச்சமாக 48 ரன்களுடன் 19.14 சராசரியாக கொண்டுள்ளார்.

2008ம் ஆண்டில் இருந்து நடைபெற்று வரும் ஐபிஎல்-ல் இந்த ஆண்டு மட்டும் தான் ரோஹித் சர்மா ஒரு அரைசதம் கூட அடிக்காமல் இருந்து உள்ளார். இது ரோஹித் சர்மாவிற்கு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு டி20 உலக கோப்பை நடைபெற உள்ள நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் மோசமான பார்ம் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இருப்பினும், வரும் போட்டிகளில் மீண்டும் பேட்டிங்கில் பழைய பார்மிற்கு திரும்புவார் என்று ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

Latest news

மாறி மாறி வரிகளை ஏற்றும் சீனா – அமெரிக்கா

அமெரிக்கா மீது விதிக்கப்பட்ட வரிகளை மேலும் அதிகரிக்க சீனா முடிவு செய்துள்ளது. சீனாவிற்கு எதிராக அமெரிக்கா விதித்த மிகப்பெரிய 145% வரிக்கு பதிலளிக்கும் விதமாக இது செய்யப்பட்டதாக...

சீனாவும் ஆஸ்திரேலியாவும் ஒன்று சேர்வதற்கான அறிகுறிகள்

உலகளாவிய வர்த்தகத்தை அதிகரிக்க ஆஸ்திரேலியாவுடன் இணைந்து செயல்பட சீனா தயாராகி வருகிறது. சீன இறக்குமதிகள் மீதான வரிகளை டிரம்ப் 125% ஆக உயர்த்தியதை அடுத்து இந்த நடவடிக்கை...

விக்டோரியாவில் குறைந்துவரும் ஜெசிந்தா ஆலனின் செல்வாக்கு

விக்டோரியன் முதல்வர் ஜெசிந்தா ஆலனின் செல்வாக்கு மாநிலத்தில் குறைந்துள்ளதாக ஒரு கணக்கெடுப்பு வெளிப்படுத்தியுள்ளது. Redbridge நடத்திய கருத்துக் கணிப்பில், ஜெசிந்தா ஆலனின் நிகர திருப்தி மதிப்பீடு எதிர்மறை...

பண விகிதம் பற்றிய NAB வங்கியின் கருத்து

ஆஸ்திரேலிய ரொக்க விகிதத்தை 2.6 சதவீதமாகக் குறைப்பதாக NAB வங்கி கூறுகிறது. இது சராசரி அடமானங்களில் நூற்றுக்கணக்கான டாலர்களைக் குறைக்கும் என்று அவர்கள் நம்புகிறார்கள். அடுத்த ஜூலை மாதம்...

எதிர்காலத்தில் ஆஸ்திரேலிய அத்தியாவசிய சேவையின் விலை அதிகரிக்கும் வாய்ப்பு!

எதிர்காலத்தில் அடிப்படை அஞ்சல் கட்டணங்களை அதிகரிக்க ஆஸ்திரேலிய அஞ்சல் துறை எதிர்பார்க்கிறது. ஆஸ்திரேலிய தேசிய அஞ்சல் சேவையான Australia Post, அதன் பொது கடித சேவைகளுக்கான விலை...

2024 Customer Satisfaction Award வென்றவர்களின் பட்டியல் இதோ!

2024 ஆம் ஆண்டு Roy Morgan வருடாந்திர வாடிக்கையாளர் திருப்தி விருதுகளின் (Customer Satisfaction Award) பல வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, ஆஸ்திரேலியாவின் இந்த ஆண்டின் சிறந்த...