கடந்த 15 ஆண்டுகளாக ரஷ்யாவில் இயங்கிவந்த ஸ்டார்பக்ஸ் நிறுவனம் அங்கிருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த பிரபலமான ஸ்டார்பக்ஸ் காஃபி நிறுவனம் ரஷ்யாவில் 130 கிளைகளுடன் இரண்டாயிரம் ஊழியர்களை கொண்டு இயங்கி வந்தது.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருவதையடுத்து மெக்டொனால்டு, ரெனால்ட் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களும் ரஷ்யாவில் இருந்து வெளியேறியுள்ளன.
ரஷ்யாவில் இயங்கிவரும் மேற்கத்திய நிறுவனங்கள் அங்கு உள்ள தங்களது சொத்துக்களை விற்பனை செய்தும், உள்ளூர் நிறுவனங்களிடம் ஒப்படைத்தும் ரஷ்யாவுடனான தங்களது வர்த்தகத்தை முறித்து வருகின்றன.
நன்றி – தமிழன்