Cinema ரஜினிகாந்த்தை திடீரென சந்தித்த இளையராஜா...காரணம் இது தான்

ரஜினிகாந்த்தை திடீரென சந்தித்த இளையராஜா…காரணம் இது தான்

-

தமிழ் சினிமாவின் இரு மேதைகளாக கருதப்படுபவர்கள் ரஜினிகாந்த்தும் இளையராஜாவும். இவர்கள் இருவர் இடையே நீண்ட கால நட்பு உள்ளது. ரஜினி நடித்த பதினாறு வயதினிலே துவங்கி, பல படங்களில் ஏராளமான ஹிட் பாடல்களை தந்துள்ளார் இளையராஜா. இந்நிலையில் ரஜினிகாந்த் வீட்டிற்கு திடீரென சென்ற இளையராஜா, அவருடன் பல மணி நேரம் மனம் விட்டு பேசி உள்ளார்.

பிறகு புறப்பட்டு சென்ற இளையராஜாவுடன் ரஜினிகாந்தும் புறப்பட்டு சென்றுள்ளார். இளையராஜாவின் ஸ்டூடியோவிற்கு சென்ற ரஜினி, அங்கு இசைக்கச்சேரிக்காக நடைபெற்ற ஒத்திகை நிகழ்ச்சியை கண்டு ரசித்துள்ளார். எதிர்வரும் ஜுன் மாதம் 2 ம் தேதி இளையராஜாவின் 79வது பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ளது. இளையராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு கோயம்புத்தூரில் இளையராஜாவின் இசைக்கச்சேரி நடைபெற உள்ளது. இதற்கான ஒத்திகை நிகழ்ச்சியை தான் ரஜினி கண்டு ரசித்துள்ளார்.

இசைக்கச்சேரி ஒத்திகையை பார்த்து விட்டு இளையராஜாவை மனம் திறந்து பாராட்டி உள்ளார் ரஜினிகாந்த். தனது பிறந்தநாளை முன்னிட்டு நடக்கும் இந்த இசை கச்சேரிக்காக தான் தனிப்பட்ட முறையில் ரஜினிகாந்த்திற்கு அழைப்பு விடுப்பதற்காகவே இந்த திடீர் சந்திப்பு நடந்துள்ளது. விரைவில் ரஜினியின் அடுத்த படமான தலைவர் 169 படத்தின் வேலைகள் துவங்கப்பட உள்ளது. இதனால் ரஜினி தற்போது ஓய்வில் இருக்கிறார். படப்பிடிப்பை துவங்குவதற்கு முன் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக விரைவில் ரஜினிகாந்த் அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.

Latest news

ஆஸ்திரேலியாவில் உள்ள McDonald’s உணவகங்களில் கவுண்டர்களுக்கு முன்னால் ஒரு பிளாஸ்டிக் கவர்

அவுஸ்திரேலியாவில், துரித உணவு உணவக சங்கிலி அதன் உணவகங்களின் கவுன்டர்களுக்கு முன்னால் பிளாஸ்டிக் கவரைப் பயன்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.

குயின்ஸ்லாந்து பொது போக்குவரத்து சேவைகளில் பெரிய மாற்றம்

குயின்ஸ்லாந்து மாநிலத்தில் பயணிகள் போக்குவரத்து பேருந்து சேவைகளுக்கான கட்டண முறையை எளிமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்காலத்தில் ஸ்மார்ட்போன்,...

பல தசாப்தங்களுக்குப் பிறகு, ரிசர்வ் வங்கிக்கு இன்று திருத்த அறிக்கை

ஆஸ்திரேலியாவின் பெடரல் ரிசர்வ் வங்கியில் அறிமுகப்படுத்தப்பட உள்ள சீர்திருத்தங்கள் அடங்கிய அறிக்கையை மத்திய கருவூல அமைச்சர் ஜிம் சால்மர்ஸ் இன்று பெற உள்ளார்.

கன்பரா விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபருக்கு 3 வருட சிறைத்தண்டனை

கடந்த ஆகஸ்ட் மாதம் கன்பரா விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேகநபருக்கு 3 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.