News மீண்டும் அத்துமீறும் சீனா...எல்லையில் ராணுவத்தை குவித்தது இந்தியா

மீண்டும் அத்துமீறும் சீனா…எல்லையில் ராணுவத்தை குவித்தது இந்தியா

-

இந்திய எல்லை பகுதியில் மீண்டும் சீனா தனது ஆக்கிரமிப்பு வேலைகளை துவங்கி உள்ளது. பாங்காங் ஏரியில் இரண்டாவது பாலம் அமைக்கும் பணிகளை சீனா துவங்கி உள்ளது. இதனால் சீனாவிற்கு பதிலடி கொடுக்க இந்தியா தயாராகி வருகிறது.

எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் ராணுவ படைகளை குவித்துள்ளது இந்தியா. டாங்கிகள், ராணுவ வீரர்கள் விரைந்து செல்வதற்கு வசதியாக பாலம், சாலைகள் அமைக்கும் பணியை இந்தியா துவங்கி உள்ளது. லடாக் ஏரியின் குறுக்கே, இந்திய எல்லையில் இருக்கும் இமய மலைத் தொடர் பகுதியில் சீனா அமைத்து வரும் இந்த பாலத்தால் இந்தியாவின் பாதுகாப்பிற்கும், இமயமலை தொடருக்கு ஆபத்து ஏற்படும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

2020 ம் ஆண்டு ஜுன் மாதம் இந்தியா – சீனா இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில், எல்லையில் பதற்றத்தை குறைப்பதற்காக சட்ட விரோதமாக கட்டுமான பணிகள் நடத்தக் கூடாது என ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் ஒப்பந்தத்தை மீறும் வகையில் சீனா தற்போது நடந்து வருவதற்கு இந்திய அரசு சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2020ம் ஆண்டு எல்லைப் பகுதியில் இந்தியா மற்றும் சீன ராணுவ வீரர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர், சீன வீரர்கள் 5 பேர் கொல்லப்பட்டனர். இரு நாட்டு அரசு தரப்பிலும் இவ்வாறு தெரிவிக்கப்பட்ட நிலையில், இந்திய வீரர்கள் 38 பேரும், சீன வீரர்கள் 45 பேரும் உயிரிழந்ததாக மற்ற தகவல்கள் தெரிவித்தன.

Latest news

நாளை வேலை நிறுத்தம் செய்யவிருக்கும் 200 குவாண்டாஸ் விமானிகள்

சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை அடுத்த 24 மணி நேரத்தில் நிறைவேற்றாவிட்டால், அடுத்தகட்ட தொழில்துறை நடவடிக்கை எடுக்கப்படும் என குவாண்டாஸ் விமானிகள் தெரிவித்துள்ளனர்.

4வது மாதத்திற்கான வட்டி விகிதங்களில் மாற்றம் இல்லை

இன்று நடைபெற்ற பெடரல் ரிசர்வ் வங்கியின் நிர்வாகக் குழு கூட்டத்தில் வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை. அதன்படி, ரொக்க...

தொழிற்பயிற்சி கல்விக்கு $37.8 மில்லியன் கூடுதல் ஒதுக்கீடு

தொழிற்பயிற்சி கல்வி மேம்பாட்டிற்காக கூடுதலாக 37.8 மில்லியன் டாலர்களை ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. செய்தியாளர்களிடம்...

Yes23 பிரச்சாரத்திற்கு ஒரு எச்சரிக்கை

வாக்கெடுப்பில் முன்மொழிவுக்கு ஆதரவாக செயல்படும் Yes23 பிரச்சாரத்திற்கு தேசிய தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, தேர்தல் ஆணையத்தின்...

கிழக்கு விக்டோரியாவில் அபாய நிலையில் உள்ள காட்டுத் தீ

கிழக்கு விக்டோரியாவின் பல பகுதிகளில் காட்டுத்தீ அபாயகரமான நிலையை எட்டியுள்ளது. பல புறநகர் பகுதிகளில் உள்ள மக்களை விரைவில்...

போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வு இளைஞர் சமூகத்திற்கு இல்லை என தெரியவந்துள்ளது

அவர்கள் பயன்படுத்தும் போதைப்பொருள் தொடர்பில் இந்த நாட்டில் இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு இல்லை என கணக்கெடுப்பு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.