மனைவியின் அடி தாங்க முடியாமல் நீதிமன்றத்தில் பாதுகாப்பு கேட்ட கணவர்

0
417

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த அஜித் சிங் என்பவர் பள்ளி தலைமை ஆசிரியராக பணிபுரிகிறார். இவர் அரியானா மாநிலத்தை சேர்ந்த சுமன் என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். ஆரம்பத்தில் மகிழ்ச்சியாக தான் இவர்களின் திருமண வாழ்க்கை சென்றுள்ளது.

அதன் பிறகு கணவர் மீது கோபப்பட்டு, அவரை அடிக்கடி கொடூரமாக அடித்து தாக்க துவங்கி உள்ளார் சுமன். ஒரு கட்டத்தில் மனைவியின் அடியை தாங்க முடியாமல், போலீசில் புகார் அளித்துள்ளார் அஜித். ஆனால் மனைவி, கணவரை தினமும் அடித்து துன்புறுத்துகிறார் என்பதை நம்ப மறுத்து, புகாரை ஏற்க மறுத்துள்ளனர். தொடர்ந்து அஜித், மனைவியால் அடித்து துன்புறுத்தப்பட்டுள்ளார்.

இதனால் மனைவிக்கு தெரியாமல் வீட்டில் பல இடங்களில் கண்காணிப்பு கேமிராவை பொருத்தி உள்ளார் அஜித். அதில் மனைவி சுமன், கணவர் அஜித்தை அடிக்கும் காட்சிகள் பதிவாகி உள்ளது. இந்த வீடியோ ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அஜித், மனைவியிடம் இருந்து தனக்கு பாதுகாப்பு வேண்டும் என கேட்டுள்ளார். அஜித் சமர்பித்த வீடியோவில் அவர் அடி வாங்கும் காட்சிகளை பார்த்து நீதிபதிகளே அதிர்ச்சியில் உறைந்து போய் விட்டனர்.

அதன் பிறகு அஜித்திற்கு மனைவியிடம் இருந்து உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என போலீசுக்கு, நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். அதோடு சுமன் எதற்காக தினமும் இது போல் நடந்து கொள்கிறார் என்பதை விசாரித்து, அவருக்கு மனநல பரிசோதனை செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Previous articleமுன்னணி நடிகருக்கு வில்லனாக நடிக்கும் கமல்ஹாசன்
Next articleJHC OBA Victoria கானமழை 2022