முன்னணி நடிகருக்கு வில்லனாக நடிக்கும் கமல்ஹாசன்

0
262

நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் படம் ஜுன் 3 ம் தேதி ரிலீசாக உள்ளது. இதற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்த சமயத்தில் பாகுபலி படத்தை இயக்கிய இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கும் படத்தில் இரண்டாவது நாயகமாக நடிக்க கமலிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்பட்டது. இதற்கு கமல் சம்மதம் தெரிவிப்பாரா என அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

இந்த சமயத்தில் உலகம் முழுவதும் 1200 கோடி ரூபாய்கும் அதிகமான தொகையை வசூல் செய்த கேஜிஎஃப் 2 படத்தை இயக்கிய இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கும் புதிய படம் ஒன்றில் வில்லனாக நடிக்க கமல்ஹாசனிடம் கேட்கப்பட்டுள்ளதாம். இந்த படத்தில் நாயகனாக தெலுங்கு நடிகர் ஜுனியர் என்டிஆர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் இந்த படம் பற்றி இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை. கமல் ஏற்கனவே நடித்து வந்த இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு பாதியிலேயே நிற்கிறது. இந்த படம் கைவிடப்பட்டதாக தகவல் பரவிய நிலையில், விரைவில் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு வேலைகள் மீண்டும் துவங்கப்படும். அதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என கமலே செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

Previous articleநயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணத்தில் நடந்த திடீர் மாற்றம்
Next articleமனைவியின் அடி தாங்க முடியாமல் நீதிமன்றத்தில் பாதுகாப்பு கேட்ட கணவர்