
இந்தியாவில் ராஞ்சி – ஐதராபாத் இடையேயான இண்டிகோ விமானத்தில் சிறுவன் ஒருவனை ஏற்றுவதற்கு விமான பணியாளர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். விமான நிறுவன ஊழியர்களிடம் அந்த சிறுவனின் பெற்றோர் பலமுறை கேட்டும், அவர்கள் விமானத்தில் ஏற்ற மறுத்து விட்டனர். இந்த காட்சியை விமான நிலையத்தில் இருந்த ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார்.
இந்த சம்பவம் பற்றி விமான நிறுவன ஊழியர்களிடம் விளக்கம் கேட்ட போது, விமானத்தில் ஏறுவதற்கு சிறுவன் அச்சத்துடன் இருந்ததாகவும், அதனால் அவனின் பெற்றோர்களும் ஏற மறுத்து விட்டதாகவும் கூறினார்கள். இருந்தாலும் வீடியோவில் இருந்த காட்சிகள் இதற்கு கொஞ்சும் தொடர்பு இல்லாமல் இருந்துள்ளது.

இதனால் இது தொடர்பாக உள்நாட்டு விமான போக்குவரத்து துறை இயக்குவனரகத்திற்கு வந்த புகார் அடிப்படையில் விசாரணை நடத்தி, அறிவிக்கை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில், இண்டிகோ ஊழியர்களுக்கு மன வளர்ச்சி குறைபாடு உடைய சிறுவனை கையாள்வது சிரமமாக இருந்ததால், அந்த சிறுவனை விமானத்தில் ஏற்ற மறுப்பு தெரிவித்துள்ளனர்.
அசாதாரண சூழ்நிலையை கையாள தவறியதுடன், சூழ்நிலைக்கு ஏற்ப செயல்பட விமான நிறுவன ஊழியர்கள் தவறி உள்ளனர்.சிறப்பு திறன் கொண்டவர்களை கூடுதல் பொறுப்புடன் நடத்த வேண்டும் அதை செய்ய விமான ஊழியர்கள் தவறி விட்டனர். விமான போக்குவரத்து துறை விதிகளின்படி இண்டிகோ விமான நிறுவனத்திற்கு 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிப்பதாக உள்நாட்டு விமான போக்குவரத்து துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.