கருப்பு நிற பெண்ணால் கடையின் அழகு கெட்டு விட்டதாக கூறி பெண் மீது கொடூர தாக்குதல்

0
340

இந்தியாவில் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் மீனா என்ற பெண், பெண்களுக்கான அழகுநிலையம் நடத்தி வருகிறார். மலைகிராமத்தை சேர்ந்த பெண்ணான சேபா என்ற பட்டதாரி பெண் தனது நகைகை அடகு வைப்பதற்காக மகளுடன் திருவனந்தபுரம் வந்துள்ளார்.

மகளுடன் சாலையோர நடைபாதையில் சேபா நடந்து சென்று கொண்டிருந்த போது, அழைப்பு வந்ததால் மீனாவின் அழகு நிலைய வாசலில் நின்று தனது செல்போனில் பேசிக் கொண்டு இருந்துள்ளார் சேபா. இதை கடைக்குள் இருந்து பார்த்துக் கொண்டிருந்த மீனா, கருப்பு நிறப் பெண் ஒருவர் தனது கடைசியின் முன் நின்று செல்போனில் பேசிக் கொண்டிருந்ததால் தனது கடையின் அழகு கெட்டு விட்டதாகக் கூறி, சேபாவை கடுமையாக தாக்கி உள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. மலைகிராம பெண்ணான சேபா தாக்கப்பட்ட வீடியோ தாக்கப்பட்டதால் திருவனந்தபுரம் போலீசார் மீனா மீது வழக்குப்பதிவு, அவரை கைது செய்தனர். ஏற்கனவே மலைகிராம இளைஞன் ஒருவன் பசிக்காக கடைசியில் அரிசி திருடியதாக குற்றம் சாட்டப்பட்டு, சிலர் அவரை அடித்து கொன்ற சம்பவம் நடந்த நிலையில், மலைகிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர் கடைசியின் முன் நின்று செல்போனில் பேசியதற்காக தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Previous article100 கோடி செலவு…வெறும் 20 டிக்கெட் மட்டுமே விற்பனையான படம்
Next articleமனவளம் குறைந்த சிறுவனை விமானத்தில் ஏற்ற மறுத்த விமான நிறுவனம்