இளையராஜாவின் பேரனோடு கிரிக்கெட் விளையாடிய ரஜினிகாந்த்

0
345

நடிகர் ரஜினிகாந்த், அடிக்கடி இமயமலை சென்று வருவது வழக்கம். ஆனால் கொரோனா பரவல் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக இமயமலை செல்வதை குறைத்துக் கொண்டார் ரஜினி. இதற்கு பதிலாக ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர்களை சந்திப்பதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளார். அப்படி இளையராஜாவின் வீட்டிற்கு அடிக்கடி செல்வதை வழக்கமாக வைத்துள்ளார் ரஜினிகாந்த்.

இளையராஜா வீட்டிற்கு சென்று ஆன்மிகம் தொடர்பாக பேசிக் கொண்டிருந்த ரஜினியிடம், இளையராஜாவின் பேரன் கிரிக்கெட் விளையாட அழைத்துள்ளான். கொஞ்சமும் தயங்காமல் ஓடிச் சென்று ரஜினிகாந்த் உற்சாகமாக கிரிக்கெட் விளையாடியதை பார்த்து இளையராஜா அதிர்ந்து விட்டார். இந்த வயதிலும் அவர் இவ்வளவு உற்சாகமாக இருப்பதை பார்த்து இளையராஜா ஆச்சரியம் தெரிவித்துள்ளார்.

ரஜினி இமயமலைக்கு செல்லாததற்கு கொரோனா பரவல் மட்டும் காரணம் இல்லை. மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், அவரது கணவர் தனுஷ் இடையேயான விவாகரத்து பிரச்சனையால் ரஜினிகாந்த் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளார். மன நிம்மதியை தேடி இமயமலை செல்ல வயது முதிர்வின் காரணமாக உடல் ஒத்துழைக்காததால் இமயமலை செல்வதையே ரஜினிகாந்த் நிறுத்தி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Previous articleஇந்தியாவில் பெண் ஊழியர்கள் பணியாற்ற நேர கட்டுப்பாடு
Next articleWho said Tamils don’t party ?