உக்ரேனின் ரஷ்ய எல்லையோரம் உள்ள கிழக்கு வட்டாரத்தில் போர் உக்கிரம் அடைந்திருக்கிறது.
உக்ரேன் அதிகமான ஆயுதங்களைக் குவிக்கத் தொடர்ந்து முயற்சியெடுத்து வருகிறது.
டொனட்ஸ்க் வட்டாரத்தில் இருக்கும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த லாய்மன் நகரை ரஷ்யப்படை கைப்பற்றியிருக்கிறது.
தமது தினசரி உரையில், உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்க்கி (Volodymyr Zelenskyy) கிழக்கில் நிலவரம் விவரிக்க முடியாத அளவுக்கு மோசமாக இருப்பதாகக் கூறினார்.
எனினும் உக்ரேனியப்படை தொடர்ந்து தாக்குப்பிடிப்பதாக அவர் கூறினார்.
லுஹான்ஸ் வட்டாரத்தில் ரஷ்யப்படை செவரோ-டொனட்ஸ்க் (Severo-donetsk) நகருக்குள் சென்றிருப்பதாக உக்ரேனிய அதிகாரிகள் கூறினர்.
அந்நகரின் 90 விழுக்காட்டுக் கட்டடங்கள் சேதம் அடைந்திருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
தெற்கே இருக்கும் கெர்சோன் (Kherson) நகரம் அடுத்த ஆண்டுவாக்கில் ரஷ்யாவுடன் இணைந்துவிடும் என்று அந்நகரின் ரஷ்ய ஆதரவு அதிகாரி கூறினார்.
ரஷ்யாவின் வசமிருக்கும் அந்த நகரில் பொது வாக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.