News22 பேர் பயணம் செய்த விமானம் திடீரென மாயம்!

22 பேர் பயணம் செய்த விமானம் திடீரென மாயம்!

-

நேபாளத்தில் தனியார் ஏர்லைன்ஸ் மூலம் இயக்கப்படும் விமானம் ஞாயிற்றுக்கிழமை, 22 பேருடன் காணாமல் போனதாக விமான நிறுவனம் மற்றும் அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. சிறிய விமானம் காத்மாண்டுவில் இருந்து வடமேற்கே 200 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பொக்காரா என்ற இடத்திலிருந்து வடமேற்கே 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜோம்சோம் நகருக்கு சென்று கொண்டிருந்தது. கனடாவில் கட்டமைக்கப்பட்ட ட்வின் ஓட்டர் விமானங்களை இயக்கும் தாரா ஏர் (Tara Air), அதை இயக்குகிறது.

“விமானம் முஸ்டாங் மாவட்டத்தில் உள்ள ஜோம்சோம் வானத்தில் காணப்பட்டது, அதன் பின்னர் அது தொடர்பில் இல்லை” என்று ANI இடம் தாரா ஏர் நிறுவன தலைமை அதிகாரி நேத்ரா பிரசாத் சர்மா தெரிவித்தார்.

விமானத்தில் 4 இந்தியர்கள் மற்றும் 3 ஜப்பானியர்கள் இருந்தனர். மீதமுள்ள நேபாளி குடிமக்கள் மற்றும் விமானத்தில் பணியாளர்கள் உட்பட மொத்தம் 22 பயணிகள் இருந்ததாக அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

இமயமலை தேசமான நேபாளத்தின் ஐந்தாவது பெரிய மாவட்டமான முக்திநாத் கோயிலுக்கான யாத்திரையில், மலைப்பகுதியான முஸ்டாங் மாவட்டத்தில் உள்ள லெட்டின் “திட்டி” பகுதியில் விமானம் விபத்துக்குள்ளானதாக சந்தேகிக்கப்படுகிறது.

கடந்த 2016 ஆம் ஆண்டில், தாரா ஏர் மூலம் இயக்கப்படும் ட்வின் ஓட்டர் டர்போபிராப் விமானம் மியாக்டியின் மேற்கு மாவட்டத்தில் விபத்துக்குள்ளானதில் 23 பேர் உயிரிழந்தனர். மூன்று பணியாளர்களைத் தவிர, ஒரு சீனர் மற்றும் ஒரு குவைத் நாட்டவர் உட்பட 20 பயணிகள் விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்தனர்.

மலையின் தாயகமான நேபாளத்தில், உள்நாட்டு விமான விபத்துக்கள் அடிக்கடி பதிவாகிகின்றன. திடீரென் மாறக்கூடிய வானிலை மற்றும் கடினமான மலைப் பகுதிகளில் உள்ல விமான ஓடுதளங்கள் காரணமாக, விபத்துக்கள் அடிக்கடி ஏற்படுகின்றன.
“திட்டி பகுதியின் உள்ளூர்வாசிகள் அசாதாரண சத்தம் கேட்டதாக எங்களுக்குத் தெரிவித்தனர். நாங்கள் தேடுதல் நடவடிக்கைக்காக ஹெலிகாப்டரை அப்பகுதிக்கு அனுப்புகிறோம்,” என்று முஸ்டாங்கின் மாவட்ட காவல்துறை அலுவலகத்தின் டிஎஸ்பி ராம் குமார் டானி ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். .

உலகின் மிக உயரமான மலையின் தாயகமான நேபாளத்தில், உள்நாட்டு விமான வலையமைப்பில் விபத்துக்கள் அடிக்கடி பதிவாகிகின்றன. மாற்றக்கூடிய வானிலை மற்றும் கடினமான மலைப் பகுதிகளில் விமான ஓடுதளங்கள் இருப்பதால், விபத்துக்கள் அடிக்கடி ஏற்படுகின்றன.

Latest news

Centrelink ஆஸ்திரேலியர்களுக்கு அதிகமாகச் செலுத்திய சலுகைகள்

ஆயிரக்கணக்கான ஆஸ்திரேலிய குடிமக்களுக்கு Centrelink அதிக சலுகைகளை வழங்கியுள்ளது தெரியவந்துள்ளது. சில தனிநபர்களுக்கு $20,000 க்கும் அதிகமாக ஊதியம் வழங்கப்பட்டதாக Guardian Australia அறிக்கை குறிப்பிடுகிறது. தானியங்கி BPay...

ஆஸ்திரேலியாவில் வார இறுதியில் மாற்றமடையும் வானிலை

இந்த வார இறுதியில் ஆஸ்திரேலியா முழுவதும் பல்வேறு வானிலை நிலவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பல பகுதிகளில் ஒரே நேரத்தில் இடியுடன் கூடிய மழை மற்றும் வெப்ப அலைகள்...

கரீபியன் தீவுகள் நோக்கி மிகப்பெரிய போர்க் கப்பலை அனுப்பிய அமெரிக்கா

USS Gerald R Ford எனப் பெயரிடப்பட்ட உலகின் மிகப்பெரிய போர்க் கப்பலை கரீபியன் தீவுகள் நோக்கி அமெரிக்கா அனுப்பியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சுமார்...

குயின்ஸ்லாந்தில் வீட்டில் சமைக்கப்பட்ட உணவில் எலி விஷம் – ஐவர் மருத்துவமனையில் அனுமதி

குயின்ஸ்லாந்தின் Logan-இல் இருந்து வீட்டில் சமைக்கப்பட்ட உணவுப் பொருட்களில் எலி விஷத்தால் ஏற்படும் உடல்நலப் பிரச்சினைகள் பதிவாகியுள்ளன. இதன் விளைவாக Logan பகுதியில் ஒரு குழந்தை உட்பட...

கரீபியன் தீவுகள் நோக்கி மிகப்பெரிய போர்க் கப்பலை அனுப்பிய அமெரிக்கா

USS Gerald R Ford எனப் பெயரிடப்பட்ட உலகின் மிகப்பெரிய போர்க் கப்பலை கரீபியன் தீவுகள் நோக்கி அமெரிக்கா அனுப்பியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சுமார்...

குயின்ஸ்லாந்தில் வீட்டில் சமைக்கப்பட்ட உணவில் எலி விஷம் – ஐவர் மருத்துவமனையில் அனுமதி

குயின்ஸ்லாந்தின் Logan-இல் இருந்து வீட்டில் சமைக்கப்பட்ட உணவுப் பொருட்களில் எலி விஷத்தால் ஏற்படும் உடல்நலப் பிரச்சினைகள் பதிவாகியுள்ளன. இதன் விளைவாக Logan பகுதியில் ஒரு குழந்தை உட்பட...