ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் (Vladimir Putin) உக்ரேனியத் தானியங்களை மீண்டும் ஏற்றுமதி செய்வது குறித்துப் பேசத் தயாராய் இருப்பதாகக் கூறியிருக்கிறார்.
அவர் பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளிடம் அவ்வாறு கூறினார். உலகத்துக்குத் தேவையான கோதுமையில் சுமார் மூன்றில் ஒரு பங்கு ரஷ்யா, உக்ரேன் ஆகிய நாடுகளில் இருந்து வருகிறது.
ஆனால் ரஷ்யப் படையெடுப்புக்குப் பிறகு டன் கணக்கான தானியங்கள் வெளியே வர முடியாமல் உக்ரேனில் முடங்கிக் கிடக்கின்றன.
அதன் காரணமாக உலகெங்கும் விலைவாசி உயர்வு ஏற்பட்டுள்ளது.
மேற்கத்திய நாடுகளின் பொருளியல் தடையே பிரச்சினைக்குக் காரணம் என்று ரஷ்யா குறிப்பிட்டது.
தடையை நீக்கினால் உக்ரேனியத் தானியங்களை வெளியே கொண்டுவரவும் தனது உற்பத்தியை அதிகரிக்கவும் தயாராய் இருப்பதாக ரஷ்யா கூறுகிறது.