பசிபிக் தீவு நாடுகளைக் கவர்வதில் சீனாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் போட்டி நடக்கிறது.
ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் பென்னி வோங், ஃபிஜி தலைவர்களைச் சந்தித்திருக்கிறார்.
சந்திப்பு பிரமாதமாக அமைந்ததாக பிஜி பிரதமர் ஃபிராங்க் பைனிமராமா (Frank Bainimarama) கூறினார்.
இருநாட்டுக்கும் இடையே நட்பு வலுப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
ஆஸ்திரேலியாவின் புதிய அரசாங்கம் பசிபிக் தீவுகளுடன் அரசதந்திர உறவை மேம்படுத்துவதற்கு முதல் உரிமை கொடுத்திருக்கிறது.
அந்த வட்டாரத்துக்குக் கூடுதலாகச் சுமார் 380 மில்லியன் டாலர் வழங்கப்போவதாக ஆஸ்திரேலியப் பிரதமர் ஆன்டனி ஆல்பனீசி (Anthony Albanese) கூறினார்.
தற்காப்புப் பயிற்சி, கடல்துறை பாதுகாப்பு, வட்டாரப் பருவநிலை மாற்றம் ஆகியவற்றில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்தவிருக்கிறது.