பொருளாதார நெருக்கடி…கேரளாவில் எரிபொருள் நிரப்பும் இலங்கை விமானங்கள்

0
270

பொருளாதார நெருக்கடி காரணமாக கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய முடியாமல் இலங்கை தவித்து வருகிறது. இதனால் பெரும்பாலான நெடுந்தூர விமானங்கள் பலவற்றின் பயணங்களை இலங்கையை சேர்ந்த விமான நிறுவனங்கள் நிறுத்தி விட்டன. ஜெர்மனியின் பிராங்க்பர்ட், ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரங்களுக்கு செல்லும் விமான சேவைகள் மட்டும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கொழும்புவில் இருந்து ஜெர்மனி மற்றும் ஆஸ்திரேலியா நாட்டு நகரங்களுக்கு செல்லும் விமானங்கள் இந்தியாவின் கேரளா மாநில தலைநகர் திருவனந்தபுரத்திற்கு வந்து எரிபொருள் நிரப்பி செல்கின்றன. திருவனந்தபுரத்தில் இந்திய விமானங்களுக்கு வழங்கும் அதே விலையில் எரிபொருள், இலங்கை விமானங்களுக்கும் வழங்கப்படுகிறது.