
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை வைத்திருப்பவர் ரஜினிகாந்த். அனைவராலும் சூப்பர் ஸ்டார் என புகழப்படும் ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா. இவர் முன்னணி நடிகர் தனுஷை 2004 ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் திருமணமாகி 18 ஆண்டுகள் கழித்து தாங்கள் பிரிய போவதாக ஐஸ்வர்யா, தனுஷ் இருவரும் அறிவித்தனர்.
இந்த தம்பதி மீண்டும் சேர்ந்து வாழ ரசிகர்கள், நண்பர்கள், திரையலகத்தினர் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவருமே சினிமா பணிகளில் பிஸியாக இருந்து வருகிறார்கள். ஐஸ்வர்யாவும் ஒரே சமயத்தில் பட படங்களை இயக்குவதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் ஐஸ்வர்யாவில் சொத்து மதிப்பு பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
அப்பா ரஜினிகாந்த் மற்றும் கணவர் தனுஷ் அல்லாமல் ஐஸ்வர்யா மட்டும் இதுவரை சம்பாதித்த சொத்தின் மதிப்பு 20 முதல் 30 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளில் மட்டும் இவரின் சொத்து மதிப்பு வேகமாக உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.