உயிருக்கு ஆபத்தான நிலையில் நித்தியானந்தா

0
34

பலாத்காரம், கடத்தல், மோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வரும் சாமியார் நித்தியானந்தா, இந்துக்களுக்காக கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கி விட்டதாக பிரகடனப்படுத்தினார். அதோடு அவ்வப்போது தனது பக்தர்களுக்கு சத்சங்கம் என்ற பெயரில் ஆன்மிக சொற்பொழிவு, சமூக வலைதளங்களில் வாயிலாக வழங்கி வந்தார்.

இவர் எங்கிருக்கிறார் என இதுவரை தெரியவில்லை. இந்நிலையில் தலைமறைவாக இருக்கும் நித்தியானந்தா கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் நித்தியானந்தா முகம் காட்டாமல் இருந்து வருகிறார். பக்தர்களுக்கு சத்சங்கம், ஆசி வழங்குவது என எதிலும் நித்தயிானந்தா கலந்து கொள்ளவில்லை.

அவர் உயிரிழந்து விட்டதாக தகவல் பரவியநிலையில், சமீபத்தில் தானே கைப்பட எழுதி கடிதம் ஒன்றை நித்தியானந்தா வெளியிட்டார். ஆனால் தற்போது நித்தியானந்தா கோமா நிலைக்கு சென்று விட்டதாகவும், அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வருவதாகவும் கூறப்படுகிறது. நித்தியானந்தாவிற்கு சமீப காலமாக அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.