கிழக்கு உக்ரேனில் உள்ள ஓர் ஊரை வெடிகுண்டுகளால் தாக்கிய குற்றத்திற்காக ரஷ்ய ராணுவ வீரர்கள் இருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் பதினொன்றரை ஆண்டுச் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
ரஷ்ய ராணுவ வீரர்களின் போர்க் குற்றங்களுக்கு உக்ரேனில் 2ஆவது முறையாகத் தண்டனை விதிக்கப்படுகிறது.
அந்த இரண்டு ராணுவ வீரர்களும் தங்கள் குற்றங்களை ஒப்புக்கொண்டனர்.
அவர்கள் ரஷ்யாவின் பெல்கொரோட் பகுதியிலிருந்து கார்கிவ் பகுதியில் தாக்குதல் நடத்திய படையைச் சேர்ந்தவர்கள்.
எல்லையைக் கடந்தபோது அவர்கள் கைது செய்யப்பட்டனர். அந்தத் தாக்குதலில் கல்வி மையம் ஒன்று அழிக்கப்பட்டது.