Newsஜெர்மனி குடியுரிமைக்காக நீண்ட காலம் காத்திருக்கும் வெளிநாட்டவர்களுக்கு வெளியான தகவல்

ஜெர்மனி குடியுரிமைக்காக நீண்ட காலம் காத்திருக்கும் வெளிநாட்டவர்களுக்கு வெளியான தகவல்

-

ஜெர்மனியின் புதிய கூட்டணி அரசாங்கம், ஆட்சி அமைப்பதற்கு முன்பிருந்தே குடியுரிமைச் சட்டங்களில் மாற்றங்கள் கொண்டு வர திட்டம் வைத்திருப்பதாக தெரிவித்து வருகிறது.

இந்நிலையில், FDP கட்சியின் புலம்பெயர்தல் கொள்கை நிபுணரான Dr. Ann-Veruschka Jurischஇடம், அது குறித்து சில கேள்விகள் எழுப்பப்பட்டன.

குடியுரிமைச் சட்டங்களில் மாற்றங்கள் எப்போது கொண்டு வரப்படும் என்பது முதலான சில விடயங்கள் குறித்து அவர் கூறிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

ஜேர்மனியில் வாழ்வோரில் சுமார் 14 சதவிகிதம்பேர் வெளிநாட்டு பாஸ்போர்ட் ஒன்றைத்தான் வைத்திருக்கிறார்கள். அதாவது, 11.8 மில்லியன் பேர்…

அவர்களில் ஒரு பகுதியினர் ஐரோப்பிய ஒன்றிய குடிமக்கள். அவர்கள் ஜேர்மானிய குடிமக்களானபோது அவர்கள் தங்கள் சொந்த நாட்டு பாஸ்போர்ட்டை வைத்துக்கொள்ள அவர்களால் முடிந்தது. ஆனால், ஐரோப்பிய ஒன்றியத்தாரல்லாத பெரும் எண்ணிக்கையிலானவர்கள் ஜேர்மன் குடியுரிமை பெறவேண்டுமானால், அவர்கள் தங்கள் சொந்த நாட்டின் பாஸ்போர்ட்டைக் கைவிட முன்வரவேண்டும்.

ஆகவே, பலர் தங்கள் சொந்த நாட்டின் பாஸ்போர்ட்டை இழக்க மனமில்லாததால் ஜேர்மனியில் வாழும் வெளிநாட்டவர்களாகவே வாழ்ந்து வருகிறார்கள். குடியுரிமைச் சட்டங்களில் மாற்றம் கொண்டுவரப்பட்டு, ஜேர்மன் குடியுரிமை கிடைத்தாலும் தங்கள் சொந்த பாஸ்போர்ட்டையும் வைத்துக்கொள்ளலாம் என்ற நிலை வருவதற்காக அவர்கள் காத்திருக்கிறார்கள்.

இந்த குடியுரிமைச் சட்டங்கள் நவீனப்படுத்தப்படப்போவது எப்போது என்ற கேள்விக்கு பதிலளித்த Jurish, கூட்டணிக் கட்சிகளுக்குள் அது குறித்த பேச்சுவார்த்தைகள் தற்போது நடந்துவருவதாக தெரிவித்தார்.

இந்த ஆண்டு இறுதிவாக்கில் குடியுரிமைச் சட்டங்களில் மாற்றம் செய்யப்படும் என கூறப்பட்டாலும், குறிப்பாகச் சொல்லவேண்டுமானால், 2023ஆம் ஆண்டின் துவக்கத்தில் உண்மையாகவே இந்த மாற்றங்கள் நடைமுறைக்கு வரக்கூடும் என தோன்றுகிறது.

குடியுரிமைச் சட்டம் ஒன்று புதிதாக இயற்றப்படுவதற்கு முன், அதிலுள்ள சின்னச் சின்ன விடயங்களை கவனிக்கவேண்டியுள்ளது. குறிப்பாக, பல தலைமுறைகளுக்கு மக்கள் பல நாட்டு பாஸ்போர்ட்டுகள் வைத்திருக்கும் நிலைமையை உருவாக்கிவிடக்கூடாது என்பதில் FDP உறுதியாக உள்ளது.

அதாவது, உதாரணமாக, முதல் தலைமுறை புலம்பெயர்ந்தோரும் அவர்களுடைய பிள்ளைகளும் இரட்டைக் குடியுரிமை கோரலாம். ஆனால், அவர்களுடைய பேரப்பிள்ளைகளும், பேரப்பிள்ளைகளின் பிள்ளைகளுமோ, அவர்கள் தங்கள் தாத்தா பாட்டியின் குடியுரிமையை வைத்துக்கொள்ள விரும்புகிறார்களா, அல்லது அவர்களுக்கு ஜேர்மன் குடியுரிமை வேண்டுமா? இரண்டில் ஒன்றைத் தேர்வு செய்யுங்கள் என்ற கேள்விக்குட்படுத்தப்படுவார்கள்.

இதுபோக, மொழித்தேவைகளில் சில சலுகைகள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், மிகப்பெரிய பிரச்சினை ஒன்று உள்ளது. அத்தனை பேருக்கும் குடியுரிமை வழங்கவேண்டுமானால், குடியுரிமை விண்ணப்பங்களை பரிசீலிப்பதற்கே மிக நீண்ட காலம் தேவைப்படுகிறது.

ஆக, உத்தேசமாக 2023இல் சட்ட மாற்றங்கள் வந்தாலும், நடைமுறையில், வெளிநாட்டவர்கள் ஜேர்மன் குடியுரிமை பெற சிறிது காலம் பிடிக்கும் என்றே தோன்றுகிறது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...