வாரத்திற்கு 3 நாட்கள் மட்டும் அலுவலகத்திற்கு வந்தால் போதும் என இந்தியாவின் மிகப் பெரிய ஐடி சேவை நிறுவனமான டிசிஎஸ் எனப்படும் டாடா கன்சல்டிங் சர்வீஸ் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு தெரிவித்துள்ளது. ஜுன் மாதம் முதல் உயர் அதிகாரிகள் மட்டும், அதாவது 8 சதவீதம் ஊழியர்கள் மட்டும் கட்டாயம் அலுவலகம் வந்தால் போதும் என தெரிவித்துள்ளது.
மற்ற 2 நாட்கள் வீட்டில் இருந்தே பணியாற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் டிசிஎஸ் நிறுவனத்தின் 6 லட்சம் ஊழியர்களில், இனி 50 ஆயிரம் ஊழியர்கள் மட்டுமே அலுவலகத்திற்கு வர உள்ளனர். மீதமுள்ள 5.5 லட்சம் ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்ற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்பதையும் ராஜேஷ் கோபிநாதன் தலைமையிலான டிசிஎஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஆனால் எதற்காக இந்த முடிவை எடுத்துள்ளார்கள் என்பது பற்றி டிசிஎஸ் சார்பில் எந்த காரணமோ, விளக்கமோ சொல்லப்படவில்லை. இருந்தாலும் கோடை காலத்தில் நிர்வாகம் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது.