குரங்கு அம்மை பரவல்…தமிழக விமான நிலையங்களுக்கு அதிரடி உத்தரவு

0
249

உலகின் பல நாடுகளில் குரங்கு அம்மை பரவி வருவதால், குரங்கு அம்மை பரவும் நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளை தீவிரமாக கண்காணிக்க தமிழக விமான நிலையங்களுக்கு இந்திய சுகாதாரத்துரை உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக அமெரிக்கா, லண்டன், கனடா உள்ளிட்ட நாடுகளில் இருந்து சென்னை, கோவை விமான நிலையங்களுக்கு வருவோரை கண்காணிக்கும் படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு தொடர் காய்ச்சல், உடல் வலி, தோல் அலட்சி, அம்மை கொப்புளங்கள் அறிகுறிகள் இருந்தால் சோதனைக்கு உட்படுத்த வேண்டும். அவ்வாறு அறிகுறிகள் உள்ள பயணிகள் 21 நாட்கள் வரை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட பணியாளர்களும் தங்கள் பகுதிகளில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளின் விபரங்களை சேகரித்து, தொடர்ந்து அவர்களின் உடல்நிலை குறித்து கண்காணிக்க வேண்டும் என என்றும் தமிழக சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

Previous articleலெஸ்பியன் ஜோடி சேர்ந்து வாழ கேரள உயர்நீதிமன்றம் அனுமதி
Next articleவாரத்திற்கு 3 நாட்கள் மட்டும் அலுவலகம் வந்தால் போதும்…