இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு

0
288

இந்தியாவில் சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதாக இந்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 3712 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கடந்த 3 வாரங்களாக தினசரி கொரோனா பாதிப்பு 3000 க்கும் அதிகமாக இருந்து வருகிறது. அதிகபட்சமாக கேரளாவில் 1197 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அங்கு சுமார் 2 மாதங்களுக்கு பிறகு தினசரி பாதிப்பு மீண்டும் ஆயிரத்தை தாண்டி உள்ளது. இதே போல் மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 1081 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநில தலைநகரான மும்பையில் 739 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

டெல்லியில் 368, அரியானாவில் 187, கர்நாடகாவில் 178, உத்திர பிரதேசத்தில் 124, தமிழகத்தில் 139 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4.31 கோடி ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 4.26 கோடியாக அதிகரித்துள்ளது. தினசரி பாதிப்பு அதிகரித்து வருவதால் கொரோனாவிற்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் மீண்டும் அதிகரிக்க துவங்கி உள்ளது.

கொரோனா பாதிப்பு அதிகரித்தாலும் இதுவரை உயிரிழப்பு ஏதும் நிகழாதது ஆறுதல் அளிப்பதாக உள்ளது. இதுவரை இந்தியாவில் கொரோனா தொற்றிற்கு பலியானோர் எண்ணிக்கை 5,24,641 ஆக உள்ளது. நாடு முழுவதும் இதுவரை 193 கோடியே 70 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.

Previous articleஇந்தியாவில் 16 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகளுக்கு தடை
Next articleபேஸ்புக் காதலனை கரம் பிடிக்க ஆற்றில் நீந்தி வந்த இளம்பெண்