இந்தியாவில் 16 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகளுக்கு தடை

0
386

இந்தியாவில் 16 லட்சத்திற்கும் அதிகமான வாட்ஸ்அப் கணக்குகளுக்கு ஏப்ரல் மாதத்தில் தடை விதிக்கப்பட்டிருப்பதாக வாட்ஸ்அப் நிறுவனத்தின் மாதாந்திர அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எதற்காக இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது பற்றி விரிவான அறிக்கை ஒன்றையும் வாட்ஸ்அப் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், வாட்ஸ்அப் படப்பயனாளர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் 122 கணக்குகளை தடை செய்துள்ளோம். அதே போல் வாட்ஸ்அப்பில் தீங்கு விளைவிக்கும் செயல்பாட்டைத் தடுப்பதற்காக 16.66 லட்சம் கணக்குகளை தடை செய்துள்ளோம். நாங்ள் குற்றம் நடைபெறுவதை தடுப்பதில் கவனம் செலுத்துகிறோம். ஏனென்றால் தீங்கு ஏற்பட்ட பிறகு அதைக் கண்டறிவதை விட, தீங்கு விளைவிக்கும் செயலை தடுப்பது மிகவும் சிறந்தது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleபாடகர் கேகே.,வின் உயிரை குடித்த புகை…அதிரவைத்த கடைசி நிமிடங்கள்
Next articleஇந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு