டிக்கெட் முன்பதிவிலேயே சாதனை படைத்த கமலின் விக்ரம் படம்

0
637

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் படம் அதிக எதிர்பார்ப்புக்களுடன் ஜுன் 3 ம் தேதி வெளியாக உள்ளது. சூர்யா, விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படம் பற்றிய ஒவ்வொரு தகவல்களும் ஆர்வத்தை தூண்டுவதாக அமைந்துள்ளன.

விக்ரம் படத்திற்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விக்ரம் படம் உலகம் முழுவதும் 5000 திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அமெரிக்காவில் மட்டும் 871 திரையரங்குகளில் இந்த படம் வெளியாக உள்ளது. இந்த படம் டிக்கெட் முன்பதிவிலேயே புதிய சாதனை படைத்துள்ளது. இந்தியாவில் விக்கெட் முன்பதிவு விற்பனையில் 200 கோடி ரூபாய் லாபம் பார்த்துள்ளது.

ஐக்கிய அரபு நாடுகளில் விக்ரம் படத்திற்கு 25000 டிக்கெட்கள் விற்கப்பட்டு இருக்கிறதாம். இதுவரை எந்த தமிழ் படத்திற்கோ அல்லது இந்திய படத்திற்கோ ஐக்கிய அரபு நாடுகளில் இந்த அளவிற்கு ஆர்வம் ஏற்பட்டதில்லை என கூறப்படுகிறது.

Previous articleநடிகை பூஜா ஹெக்டே அணிந்து வந்த புடவையின் விலை…வாயடைத்து போன ரசிகர்கள்
Next articleவிக்டோரியா அருள்மிகு வக்ரதுன்ட விநாயகர் ஆலயத்தில் பஞ்சபுராண பாடல் பயிற்சி