நடிகை பூஜா ஹெக்டே அணிந்து வந்த புடவையின் விலை…வாயடைத்து போன ரசிகர்கள்

0
152

விஜய் நடித்த பீஸ்ட் படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார் பூஜா ஹெக்டே. இந்த படம் மோசமான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், அரபிக்குத்து பாடலுக்கு பூஜா ஆடிய நடனம் உலக சினிமா ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இவர் ஆடிய டான்சை ஆடி, வீடியோவாக வெளியிட்டு சமூக வலைதளங்களில் பலரும் பிரபலமாகி வருகிறார்கள்.

சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற தி லெஜண்ட் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பூஜா கலந்து கொண்டார். இந்த விழாவில் மற்ற நடிகைகள் மிகவும் கவர்ச்சியான உடை அணிந்து வர, பூஜா ஹெக்டே மட்டும் புடவையில் பாரம்பரிய தோற்றத்தில் வந்திருந்தார். தங்க நிறத்தில் ஜொலிக்கும் புடவையை அறிந்து வந்தார் பூஜா ஹெக்டே.

மொட்டாலிக் லினன் வகை புடவை விழாவில் கலந்து கொண்டவர்களின் கவனத்தை ஈர்த்தது. தற்போது இந்த புடவையில் விலை பற்றிய விபரம் வெளியாகி உள்ளது. அவர் அணிந்து வந்த புடவையின் விலை இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 40,000 ரூபாய் என கூறப்படுகிறது. இவ்வளவு விலை உயர்ந்த புடவையையா அணிந்து வந்தார் என ரசிகர்கள் வாயடைத்து போய் உள்ளனர்.