Sydneyஆஸ்திரேலிய கடலில் உலகின் மிகப்பெரிய தாவரம்

ஆஸ்திரேலிய கடலில் உலகின் மிகப்பெரிய தாவரம்

-

ஆஸ்திரேலிய கடலில் 4,500 ஆண்டுகள் பழமையான உலகின் மிகப்பெரிய தாவரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள ஷார்க் விரிகுடாவில் கடலுக்கு அடியில் உலகின் மிகப்பெரிய தாவரம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள பிளிண்டர்ஸ் பல்கலைக்கழகம் மற்றும் மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் இந்த அபூர்வமான தாவரத்தை கண்டுபிடித்தனர்.

மரபணுக் கருவிகளை பயன்படுத்தி ஷார்க் விரிகுடாவில் உள்ள கடற்புல்வெளிகளின் பன்முகத்தன்மையை அறிந்துகொள்ள முயன்றபோது, 180 கி.மீ. பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இந்த தாவரத்தை கண்டுபிடித்ததாக ஆராய்ச்சியாளர்கள் ஆச்சரியத்துடன் கூறுகின்றனர். இந்த கடற்புல் 4,500 ஆண்டுகள் பழமையானது என்று அவர்கள் மதிப்பிட்டுள்ளனர்.

பிளிண்டர்ஸ் பல்கலைக்கழகத்தின் சூழலியல் நிபுணரும், ஆய்வின் இணை ஆசிரியருமான மார்ட்டின் பிரீட் கூறுகையில், “இந்த ஒற்றைத் தாவரம் உண்மையில் மலட்டுத்தன்மையுடையதாக இருக்கலாம். அதற்கு மகரந்த சேர்க்கை இல்லை. இருப்பினும் அது எப்படி இவ்வளவு காலம் உயிர் வாழ்கிறது மற்றும் செழித்து வளர்கிறது என்பது உண்மையில் புதிராக உள்ளது” என்றார்.

Latest news

ஆஸ்திரேலியாவில் பாதியாக குறைக்கப்படும் ATM இயந்திரங்கள்

ஆஸ்திரேலியாவில் மக்களுக்கு பணம் கிடைப்பது வெகுவாகக் குறைந்துள்ளதாக புதிய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஆஸ்திரேலிய புருடென்ஷியல் ஒழுங்குமுறை ஆணையத்தின் (APRA) புதிய தரவுகளின்படி, கடந்த ஐந்து ஆண்டுகளில் ஆஸ்திரேலிய...

ஆஸ்திரேலியாவின் இளைய விமானி

ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த 16 வயது சிறுவன் ஒருவன் விமானத்தில் உலகம் முழுவதும் சுற்றி வந்து சாதனை படைத்துள்ளான். குயின்ஸ்லாந்தைச் சேர்ந்த Byron Waller என்ற இளைஞர்,...

ஒவ்வொரு மணி நேரமும் அதிகரித்து வரும் விக்டோரியாவின் கடன் சுமை

2024-25 நிதியாண்டில் விக்டோரியா அரசாங்கத்தின் நிகரக் கடன் ஒரு மணி நேரத்திற்கு $2 மில்லியன் அதிகரித்துள்ளதாக ஒரு புதிய அறிக்கை காட்டுகிறது. அதன்படி, ஒரு வருடத்தில் கடன்...

இன்று ட்ரம்ப் – ஜெலன்ஸ்கி சந்திப்பு

உக்ரெய்ன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான போர் சுமார் 3 வருடங்களுக்கும் மேலாக நீடித்து வருகின்ற நிலையில், போரை நிறுத்துவதற்கு பல நாடுகள் முயற்சித்து வருகின்றன. இந்நிலையில், உக்ரெய்ன்...