மாநிலங்களவை தேர்தலில் தமிழகத்தில் 6 பேர் போட்டியின்றி எம்.பி.,க்களாக தேர்வு

0
327

இந்திய பாராளுமன்ற மேல்சபையான மாநிலங்களவையில் 57 எம்.பி.,க்கள் இடங்கள் காலியாகின்றன. புதிய உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் தமிழகம் உள்ளிட்ட 15 மாநிலங்களில் ஜுன் 10 ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தமிழகத்தில் இருந்து 13 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இவற்றில் 7 பேரின் மனுக்கள் நிராரிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இருந்து மேல்சபை எம்.பி.,க்களாக உள்ள 6 பேரின் பதவிக்காலம் மே 29 ம் தேதி நிறைவடைந்தது. இந்த 6 பேருக்கு பதிலாக புதிதாக 6 பேரை தேர்வு செய்ய தேர்தல் நடத்தப்பட உள்ளது. மனுத்தாக்கல் செய்தவர்களில் தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுக.,வுக்கு உள்ள 4 இடங்களுக்கு கிரிராஜன், கல்யாண சுந்தரம், கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் உள்ளிட்டோர் மனுத்தாக்கல் செய்தனர். கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிற்கான ஒரு இடத்திற்கு ப.சிதம்பரமும், அதிமுக சார்பில் சி.வி.சண்முகம், தர்மர் ஆகியோர் மனுதாக்கல் செய்தனர்.

இந்நிலையில் தமிழகம் சார்பில் மனுத்தாக்கல் செய்த இந்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டதாகவும், இவர்கள் ஆறு பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாகவும் தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

Previous articleதிருமணத்தையும் வியாபாரமாக்கி பணம் பார்க்கும் நயன்தாரா – விக்னேஷ் சிவன்
Next articleமுதல் நாளில் விக்ரம் படத்திற்கு கிடைத்த வரவேற்பு…கமலுக்கு வாழ்த்து சொன்ன உதயநிதி