திருமணத்தையும் வியாபாரமாக்கி பணம் பார்க்கும் நயன்தாரா – விக்னேஷ் சிவன்

0
342

கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்த நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் தற்போது திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். இவர்களின் திருமணம் ஜுன் 9 ம் தேதி மகாபலிபுரத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மிக பிரம்மாண்டமாக இவர்களின் திருமண ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

முதலில் திருப்பதியில் இவர்களின் திருமணம் நடைபெறுவதாக சொல்லப்பட்ட நிலையில், திடீரென மகாபலிபுரத்திற்கு மாற்றினார்கள். இதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்ட நிலையில், தற்போது புதிதாக மற்றொரு காரணம் சொல்லப்பட்டுள்ளது. நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் தங்களின் திருமண நிகழ்வை ஒளிபரப்பு செய்ய பிரபலமான ஓடிடி தளம் ஒன்றுடன் பேசி உள்ளனர். திருப்பதியில் திருமணத்தை நடத்தினால் திருமண வீடியோக்களை அதிகம் எடுப்பது கஷ்டம் என்பதால் தான் மகாபலிபுரத்திற்கு இடத்தை மாற்றி உள்ளனர்.

நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணத்திற்காக 200 பேருக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதில் 30 பேர் மிக முக்கியமான பிரபலங்கள் கலந்து கொள்ள போகிறார்கள். ரஜினி, விஜய், அஜித் உள்ளிட்ட பலருக்கும் திருமண அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. முக்கியமான திரை நட்சத்திரங்கள் கலந்து கொள்ள உள்ளதால் நயன்தாராவின் திருமண வீடியோக்களை பார்க்க அதிகமானவர்கள் ஆர்வம் காட்டுவார்கள் என்ற நம்பிக்கையில், அந்த குறிப்பிட்ட ஓடிடி தளமும் மிகப் பெரிய தொகைக்கு வியாபாரம் பேசி உள்ளது. திருமணத்திலும் வியாபாரம் பேசிய பெரிய தொகையை லாபமாக பார்க்க நயன்தாரா–விக்னேஷ் சிவன் ஜோடி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Previous articleஇந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு…5 மாநிலங்களுக்கு அரசு புதிய உத்தரவு
Next articleமாநிலங்களவை தேர்தலில் தமிழகத்தில் 6 பேர் போட்டியின்றி எம்.பி.,க்களாக தேர்வு