இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு…5 மாநிலங்களுக்கு அரசு புதிய உத்தரவு

0
42

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 4041 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றிற்கு கடந்த 24 மணி நேரத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 3 மாதங்களுக்கு பிறகு மீண்டும் இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க துவங்கி உள்ளது. தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 21,177 ஆக உள்ளது.

தமிழகம், கேரளா, தெலுங்கானா, மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா ஆகிய ஐந்து மாநிலங்களில் கொரோனா நோய் தொற்று அதிகரித்து வருகிறது. இந்த நோய் தடுப்பு விதிகளை கடுமையாக்கும்படி இந்திய அரசு, இந்த 5 மாநிலங்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளி விபரத்தின் அடிப்படையில், கேரளாவில் 11 மாவட்டங்களிலும், தமிழகத்தில் 2 மாவட்டங்களிலும், கர்நாடகாவில் ஒரு மாவட்டத்திலும், மகாராஷ்டிராவில் 6 மாவட்டங்களிலும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.

விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் முகக்கவசம் அணிவது உள்ளிட்டவைகளை கடுமையாக பின்பற்ற வேண்டும். அப்படி பின்பற்றாத பயணிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்நாட்டு விமான போக்குவரத்து துறைக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.