Cinemaமுதல் நாளில் விக்ரம் படத்திற்கு கிடைத்த வரவேற்பு...கமலுக்கு வாழ்த்து சொன்ன உதயநிதி

முதல் நாளில் விக்ரம் படத்திற்கு கிடைத்த வரவேற்பு…கமலுக்கு வாழ்த்து சொன்ன உதயநிதி

-

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் படம் உலகம் முழுவதும் ரிலீசாகி உள்ளது. விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், சூர்யா உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்தை தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தான் வெளியிட்டது. தமிழகத்தில் மட்டும் 650 க்கும் அதிகமான தியேட்டர்களில் விக்ரம் படம் வெளியிடப்பட்டுள்ளது.

முதல் நாளே விக்ரம் படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. படம் சர்வதேச அளவிற்கு இருப்பதாக அனைவரும் பாராட்டி உள்ளனர். இந்த சமயத்தில் நடிகர் கமல்ஹாசனை, உதயநிதி சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார் உதயநிதி ஸ்டாலின். அத்துடன் அவர் வெளியிட்டுள்ள பதிவில், உலகநாயகன் கமல்ஹாசன் சாரின் விக்ரம் திரைப்படம் இன்று வெளியாகி மிகப் பெரிய வரவேற்பை பெற்றுள்ள நிலையில், சாரை நேரில் சந்தித்து ரெட் ஜெயிண்ட் மூவிஸ் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்தோம். கமல் சாரின் கலைப் பயணத்தில் விக்ரம் நிச்சயம் மிகப் பெரிய வசூல் சாதனையை நிகழ்த்தும் என குறிப்பிட்டுள்ளார்.

Latest news

கஞ்சா நிறைந்த மருந்துகள் உயிருக்கு ஆபத்தானவை!

ஆஸ்திரேலிய மருத்துவ சங்கம் (AMA) மற்றும் ஆஸ்திரேலிய மருந்தகக் குழு ஆகியவை 98% க்கும் அதிகமான THC (Tetrahydrocannabinol) உள்ளடக்கம் கொண்ட கஞ்சா அடிப்படையிலான மருந்துகளின்...

சமீபத்திய தரவரிசையில் ஆஸ்திரேலியா பாஸ்போர்ட் எந்த இடத்தில் உள்ளது?

உலக பாஸ்போர்ட் தரவரிசையில் இந்த ஆண்டு ஆஸ்திரேலிய பாஸ்போர்ட் மேலும் சரிந்துள்ளது. 2025 ஹென்லி பாஸ்போர்ட் குறியீட்டின்படி, ஆஸ்திரேலியர்கள் 185 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம். இதன் மூலம்...

உலகளாவிய சவாலாக உருவெடுத்துள்ள Antibiotics சிகிச்சைகள்

பாக்டீரியா நோய்களுக்கு எதிரான Antibiotics சிகிச்சைகளுக்கு எதிர்ப்பு உலகளவில் வேகமாக அதிகரித்து வருவதாக தெரியவந்துள்ளது. இதனை உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. உலகளவில் மக்களில் பொதுவான நிலைமைகளை ஏற்படுத்தும்...

உலகப் பட்டத்தை வென்ற மெல்பேர்ண் நகரம்

ஹாங்காங்கில் நடைபெற்ற 2025 உலக பயண விருதுகளில் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் ஒரு முக்கிய விருதை வென்றுள்ளது.Oceania’s Leading City Destination for 2025-இற்கான சிறந்த விருதை...