கியூபாவில் (Cuba) பெருகிய வெள்ளத்தில் தலைநகர் ஹவானாவில் குறைந்தது மூவர் மாண்டதாக நம்பப்படுகிறது.
அகத்தா (Agatha) சூறாவளியால் அத்தகைய வெள்ளம் பெருகியதாகக் கூறப்படுகிறது. வெள்ளம் ஏற்பட்ட பகுதியில் சுமார் 50,000 குடியிருப்பாளர்களின் வீடுகளில் மின்சாரத் தடை ஏற்பட்டது.
கனத்த மழையாலும் இடியும் மின்னலும் நிறைந்த சூறாவளிகளாலும் கியூபாவின் மேற்கு, மத்தியப் பகுதிகள் பெரிய அளவில் பாதிப்புற்றதாக அந்நாட்டின் வானிலை அலுவலகம் தெரிவித்தது.
தொடக்கத்தில் காணாமற்போனதாக நம்பப்பட்ட 44 வயது ஆடவர் வெள்ளத்தில் மாண்டதாக உறுதிசெய்யப்பட்டது.
மீட்புப்பணியாளர்கள் படகுகளில் மக்களை வெளியேற்றும் பணியில் ஈடுபடுகின்றனர். இதுவரை கிட்டத்தட்ட 2,000 பேர் அவர்களது வீடுகளிலிருந்து வெளியேற முடிவுசெய்துள்ளனர்.