இங்கிலாந்தில் உள்ள இந்திய வம்சாவளியை சேர்ந்த பொறியாளரான ரவீந்தர் எஸ். தஹியா, கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தின் ஜேம்ஸ் வாட் பொறியில் பள்ளியின் பேராசிரியராக உள்ளார். இவர் தலைமையிலான பொறியாளர்கள் குழு, வலிமை உணரக்கூடிய எலக்ட்ரானிக் தோலை உருவாக்கி சாதனை படைத்துள்ளது.
இது பற்றி ரவீந்தர் கூறுகையில், இந்த கண்டுபிடிப்பு மனிதனைப் போன்ற உணர்திறன் கொண்ட புதிய தலைமுறை ஸ்மார்ட் ரோபோக்களை உருவாக்க உதவும். மூளையில் இருந்து வரும் சமிக்ஞைகளுக்கு பதிலளிக்கக் கூடிய பெரிய அளவிலான மின் தோலை உருவாக்குவதற்கு இது முன்மாதிரியாக இருக்கும். வலி போன்ற எதிர்பாராத தூண்டுதல்களுக்கு நாம் அனைவரும் நம் வாழ்வின் ஆரம்பத்திலேயே பழகிக் கொள்கிறோம்.
எலக்ட்ரானிக் தோலின் இந்த புதிய வடிவத்தின் வளர்ச்சி உண்மையில் நமக்குத் தெரிந்த அளவிற்கு வலிமை ஏற்படுத்தாது. ஆனால் இது வெளிப்புற தூண்டுதலிலிருந்து கற்றல் செயல்முறையை விளக்குவதற்கான சுருக்கமான வழியாக இது கருதப்படுகிறது என்றார்.