எத்தனால், மெத்தனால் தான் வருங்கால எரிபொருள் – இந்திய அமைச்சர்

0
201

எத்தனால், மெத்தனால் போன்றவையே எதிர்கால எரிபொருட்களாக இருக்குமென என இந்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். விரைவில் மின்சார டிராக்டர், லாரியை அறிமுகம் செய்ய உள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், எரிசக்தி மற்றும் ஆற்றல் துறையின் தேவைகளை பூர்த்தி செய்ய தற்போது ஆண்டு ஒன்றிற்கு 10 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பெட்ரோலியப் பொருட்கள் இறக்குமதி செய்யப்படுவதாக கூறினார்.

மேலும், தேவை அதிகரிப்பால் அடுத்த 5 ஆண்டுகளில் 25 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு இறக்குமதி செய்யும் நிலை ஏற்படும் என்பதால் அது பொருளாதாரத்தை பாதிக்கும். வேளாண் பணிகளுக்காக எத்தனாலை மாற்று எரிபொருளாக பயன்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். உலகம் முழுவதும் சர்க்கரையின் தேவை அதிகரித்து வருகிறது. சர்வதேச சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை 140 டாலர்களாக அதிகரித்துள்ளது.

பிரேசில் கரும்பிலிருந்து எத்தனாலை உற்பத்தி செய்கிறது. இதனால் இந்தியாவிடம் இருந்து சர்க்கரை இறக்குமதி செய்யும் நாடுகளின் எண்ணிக்கை, அவைகளின் தேவை அதிகரித்து வருகிறது. ஆனால் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றிற்கு 70 அல்லது 80 டாலராக குறைந்தால் பிரேசில் சர்க்கரை உற்பத்தியை துவங்கி விடும். அதனால் கச்சா எண்ணெய் விலை குறைந்தால், சர்க்கரை விலையும் குறையும் என்றால். விவசாயிகளுக்கு உதவுவதற்காக எத்தனால் எரிபொருளை நேரடியாக விற்பனை செய்யும் நிலையங்களை உருவாக்க வேண்டும் என மாநில அரசுகளை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Previous articleஇலங்கை – அவுஸ்திரேலியா T20 போட்டி – நுழைவுச் சீட்டுகள் அனைத்தும் விற்பனை
Next articleவலியை உணரக்கூடிய எலக்ட்ரானிக் தோலை உருவாக்கிய இந்திய வம்சாவளி பொறியாளர் குழு