இந்தியாவின் ஐதராபாத்தைச் சேர்ந்த பயோலஜிக்கல் இ நிறுவனத்தார் கொரோனாவுக்கு எதிராக கார்பேவாக்ஸ் என்ற தடுப்பூசியை உருவாக்கி உள்ளனர். இந்த தடுப்பூசியை 18 வயைீற்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசியாக செலுத்துவதற்கு இந்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.
கொரோனாவிற்கு எதிராக இரண்டாவது டோஸ் தடுப்பூசியாக கோவேக்சின் அல்லது கோவிஷீல்டு தடுப்பூசியை செலுத்தி, 6 மாதங்கள் ஆனவர்கள் இந்த கார்போவாக்ஸ் தடுப்பூசியை பூஸ்டர் டோஸ் தடுப்பூசியாக செலுத்திக் கொள்ளலாம் என இந்திய மருத்துவ ஆய்வு கழகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி இந்தியாவின் முதல் பன்முகத்தன்மை கொண்ட பூஸ்டர் தடுப்பபூசி என்ற பெயரைப் பெறுகிறது.
கார்போவாக்ஸ் தடுப்பூசி ஒரு டோல் விலை 840 ரூபாய் என முதலில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் பின்னர் இந்த விலை 250 ரூபாய் என குறைக்கப்பட்டது. அதே நேரத்தில் சேனை கடணடணம் உள்ளிட்டவை சேர்த்து பயனாளிகள் 400 ரூபாய் செலுத்தி, தனியார் தடுப்பூசி மையங்களில் போட்டுக் கொள்ளலாம் என கூறப்படுகிறது.