அண்ணா என்று அழைத்த சூர்யா…தம்பி சார் என பதில் சொன்ன கமல்

0
277

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹசன் நடித்த விக்ரம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ள இந்த படத்தில் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். சூர்யாவின் நடிப்பை அனைவரும் பாராட்டி வருகின்றனர். விக்ரம் 3 படத்திலும் நடிக்க சூர்யாவை கமல் தேர்வு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

விக்ரம் படத்தில் போதை பொரும் கடத்தும் கும்பலின் தலைவனாக சூர்யா நடித்துள்ளார். இந்த கதாபாத்திரத்தில் நடித்தது பற்றி சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில், அன்புள்ள கமல் அண்ணா, எப்படி சொல்றது…கனவு நனவான தருணம்… உங்களுடன் திரையில் நடிக்க வேண்டும் என்பது. மிக்க நன்றி லோகேஷ். ரோலக்ஸ் கதாபாத்திரத்திற்கு கிடைத்த வரவேற்பு மகிழ்ச்சி அளிக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

சூர்யா பதிவிட்ட ட்விட்டர் பதிவிற்கு பதில் அளித்த கமல்ஹாசன், அன்புள்ள தம்பி சூர்யா, ஏற்கனவே உங்கள் மீது அன்பு இருந்தது. இப்போது அது மேலும் அதிகரிக்கும். உங்களுக்கு என் வாழ்த்துக்கள் தம்பி. மன்னிக்கவும் தம்பி சார் என கூறி உள்ளார். இவர்களின் இந்த அண்ணன் – தம்பி பாச உரையாடல் அனைவரையும் கவர்ந்துள்ளது.