இலங்கையில் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் பலர் இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு படகு வழியாக செல்ல முயற்சித்து வருகின்றனர்.
அந்த வகையில், ஆஸ்திரேலியாவுக்கு படகில் சென்ற இலங்கையைச் சேர்ந்த படகு உரிமையாளரும் படகோட்டியுமான 30 வயது நிஷாந்தா தமேல் ஆஸ்திரேலியாவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டு இலங்கையில் சிறைப்படுத்தப்பட்டுள்ளார்.
அவரது படகை ஆஸ்திரேலிய எல்லைப்படை அழித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
“எங்களிடம் இப்போது படகும் இல்லை. எனது கணவரை வெளியில் கொண்டு வருவது மட்டுமே எனக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை.
அவர் மனரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார். எனது குழந்தையிடம் அவர் வேலைக்கு சென்றுள்ளதாகக் கூறியுள்ளேன்,” எனத் தெரிவித்துள்ளார் நிஷாந்தா தமேலின் மனைவியான இரீஷா துலஞ்சல்.