பிரிஸ்பேன் இசை பிரியர்களை மகிழ்விக்க வரும் சத்யபிரகாஷ் பற்றி இதெல்லாம் தெரியுமா?

0
614

பிரிஸ்பேனில் ஆகஸ்ட் 28 ம் தேதி நடைபெற உள்ள இன்னிசை மாலை 2022 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இசை பிரியர்களை மகிழ்விக்க வரும் பாடகர் சத்யபிரகாஷ் பற்றிய சிறிய அறிமுகத்தை இங்கே காணலாம்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கள் சீசன் 3 ல் போட்டியாளராக கலந்து கொண்டு மூன்றாம் இடம் பிடித்து பிரபலமானவர் சத்யபிரகாஷ். தமிழகத்தின் மதுரையை சேர்ந்த இவர், கோவையில் பொறியியல் பட்டம் பெற்றவர். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் சினிமாவில் பாடும் வாய்ப்பு கிடைத்தது. கர்நாடக இசை, பக்தி பாடல்கள் உள்ளிட்ட பல பாடல்களை பாடி உள்ளனர். தமிழ் சினிமாவில் தனுஷ் நடித்த 3 படத்தின் மூலம் பாடகராக அறிமுகமானார்.

இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், வித்யாசாகர், இமான், அனிருத், ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்ட பல முன்னணி இசையமைப்பாளர்களுடன் பணியாற்றிய சத்யபிரகாஷ், பல படங்களில் ஏராளமான பிரபலமான பாடல்களை பாடி உள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னட மொழி சினிமாக்களிலும் இவர் பாடி உள்ளார். பல மொழிகளில் இதுவரை 85 க்கும் அதிகமான பாடல்களை பாடி உள்ளார்.

விஜய் நடித்த மெர்சல் படத்தில் ஆளப்போறான் தமிழன், அச்சம் என்பது மடமையடா படத்தில் ராசாளி, வெள்ளக்கார துரை படத்தில் அம்மாடி உன் அழகு உள்ளிட்ட பல பாடல்களை பாடி உள்ளார். சிறந்த பாடகருக்கான பல விருதுகளை இவர் வென்றுள்ளார்.

Previous article2022ஆம் ஆண்டு நடைபெற்ற சைவசமய அறிவுத்திறன் போட்டிக்கான பரிசளிப்பு விழா
Next article4 வருடங்களின் பின் பிலோலா திரும்பிய பிரியா – முருகப்பன் குடும்பம்!