News4 வருடங்களின் பின் பிலோலா திரும்பிய பிரியா – முருகப்பன் குடும்பம்!

4 வருடங்களின் பின் பிலோலா திரும்பிய பிரியா – முருகப்பன் குடும்பம்!

-

நான்கு வருடங்களுக்கும் மேலாக தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்த இலங்கையைச் சேர்ந்த புகலிடக் கோரிக்கையாளர்களாக பிரியா – முருகப்பன் (பிலோலா குடும்பம்) குடும்பத்தினர் இறுதியாக குயின்ஸ்லாந்தின்மத்திய நகரான பிலோலாவுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

பிரியா, அவரது கணவர் நடேஸ் மற்றும் ஆஸ்திரேலியாவில் பிறந்த அவர்களது மகள்களான கோபிகா (6), மற்றும் தர்ணிகா(4) ஆகியோர் எதிர்வரும் வெள்ளிக்கிழமை பிற்பகல் பிலோலாவை சென்றடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையிலிருந்து புகலிடம் கோரி ஆஸ்திரேலியாவுக்கு சென்ற குறித்த குடும்பத்தினர், அங்கு தங்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்த நிலையில் கடுமையான சட்ட நடவடிக்கைகளை எதிர்கொண்டதுடன், மெல்போர்னிலிருந்து கிறிஸ்மஸ் தீவில் உள்ள தடுப்பு முகாமுக்கு மாற்றப்பட்டனர்.

எனினும், அரசாங்கத்தில் ஏற்பட்ட மாற்றம் அவர்கள் பிலோலாவுக்குத் திரும்புவதற்கு வழி வகுத்துள்ளது.

இந்த குடும்பம் வீடு திரும்புவதில் தாம் பெருமிதம் கொள்வதாக அந்நாட்டு பிரதமர் என்டனி அல்பானீஸ் தெரிவித்தார்.

மார்ச் 2018 இல் பிலோலாவிலிருந்து இக்குடும்பம் அழைத்துச் செல்லப்பட்டு, குடிவரவு தடுப்பு முகாமில் வைக்கப்பட்டது.

அவர்களைத் மீண்டும் பிலோலாவுக்கு அழைத்துவருவதற்காக உள்ளூர் மக்கள்1,500 நாட்களுக்கும் மேலாக பிரசாரத்தை முன்னெடுத்திருந்தனர்.

குடும்பத்திற்கு ஆதரவாக ஹோம் டு பிலோ பிரசாரகர் ஏஞ்சலா ஃபிரடெரிக்கின் Change.org மனுவில் கிட்டத்தட்ட 600,000 பேர் கையெழுத்திட்டனர்.

மேலும் 53,000 க்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகள் மற்றும் மின்னஞ்சல்கள் நாடு முழுவதும் உள்ள ஆதரவாளர்களிடமிருந்து கிடைக்கப்பெற்றன.

இந்நிலையில், 2019 இல், இக்குடும்பத்தை மீண்டும் இலங்கைக்கு அனுப்பும் கூட்டு முயற்சியை நீதிமன்றங்கள் தடுத்தன.

2021 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில், குடிவரவு அமைச்சர் அலெக்ஸ் ஹாக் அவர்களை பெர்த்தில் உள்ள சமூக காவலுக்கு மாற்றும் வரை, அவர்கள் இரண்டு ஆண்டுகள் கிறிஸ்துமஸ் தீவு தடுப்பு மையத்தில் வைக்கப்பட்டிருந்தனர்.

ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு, இடைக்கால உள்விவகார அமைச்சர், ஜிம் சால்மர்ஸ், இடம்பெயர்தல் சட்டத்தின் 195A பிரிவின் கீழ் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி குடும்பத்தை மீண்டும் வீட்டிற்குச் செல்ல அனுமதித்தார்.

Latest news

இஸ்ரேலை தாக்க ஆரம்பித்த ஈரான்

13ஆம் திகதி இரவு ஈரான் இஸ்ரேலில் அடையாளம் காணப்பட்ட இலக்குகளை ஆளில்லா விமானங்கள் மற்றும் கப்பல் ஏவுகணைகள் மூலம் தாக்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சிரியாவில் உள்ள...

இளம் ஆஸ்திரேலியர்களிடையே 50 சதவீதம் அதிகரித்துள்ள மனநல கோளாறுகள்

அவுஸ்திரேலிய இளைஞர் சமூகத்தில் மனநலக் கோளாறுகள் 50 சதவீதம் அதிகரித்துள்ளதாக சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. கடந்த 15 வருடங்களாக இளைஞர் சமூகத்தின் மனநலம் தொடர்ந்து மோசமடைந்து...

ஆஸ்திரேலியர்கள் அனுபவித்து வந்த இலவச சேவையை நிறுத்த திட்டம்

பல தசாப்தங்களாக ஆஸ்திரேலியர்கள் அனுபவித்து வந்த இலவச இரத்த பரிசோதனைகள் முடிந்துவிடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். ஒரு மில்லியன் ஆஸ்திரேலியர்கள் ஒவ்வொரு வாரமும் ஒரு வழக்கமான இரத்த...

வாடகை வீடுகளை வாங்குபவர்களை குறிவைத்து நடக்க்கும் மோசடி

வாடகை வீடுகள் வழங்குவதாக கூறி சமூக வலைத்தளங்களில் மேற்கொள்ளப்படும் நிதி மோசடிகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் மக்களுக்கு அறிவித்துள்ளனர். மெல்போர்ன் குடியிருப்பாளர்கள் பலர் போலி ஒப்பந்தங்களில்...

வாடகை வீடுகளை வாங்குபவர்களை குறிவைத்து நடக்க்கும் மோசடி

வாடகை வீடுகள் வழங்குவதாக கூறி சமூக வலைத்தளங்களில் மேற்கொள்ளப்படும் நிதி மோசடிகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் மக்களுக்கு அறிவித்துள்ளனர். மெல்போர்ன் குடியிருப்பாளர்கள் பலர் போலி ஒப்பந்தங்களில்...

மெல்போர்னில் வெள்ள அனர்த்தங்களைக் குறைக்க நடவடிக்கை

மெல்போர்னில் வெள்ள அனர்த்தங்களைக் குறைப்பதற்காக, நீர் குழாய் அமைப்பை மீட்டெடுக்க மாநில அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். கடந்த அக்டோபரில், மெல்போர்னில் மரிபனாங் நதி பெருக்கெடுத்து ஓடியதில் 500...