
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய விக்னேஷ் சிவன், தனக்கும் நயன்தாராவிற்குமான திருமணம் பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அப்போது பேசிய அவர், தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையிலும் அனைவரது ஆசிர்வாதமும் தேவை. என் வாழ்க்கையின் காதல் நயன்தாரா. வாழ்க்கையில் அடுத்த நிலைக்கு செல்ல உள்ளோம்.
ஜுன் 9 ஆம் தேதி மகாபலிபுரத்தில் எங்களின் திருமணம் நடைபெற உள்ளது. நெருங்கிய நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே இதில் பங்கேற் உள்ளனர். திருமணத்திற்கு பின் அன்றைய தினம் பிற்பகலுக்கு மேல் திருமண புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர உள்ளோம். மாமல்லபுரத்தில் உறவினர், நண்பர்கள் முன்னிலையில் இந்து முறைப்படி திருமணம் நடைபெற உள்ளது. நிறைய பேரை அழைத்து திருமணத்தை நடத்துவது உள்ளிட்ட சில காரணங்களால் திருப்பதியில் நடத்த முடியவில்லை. ஜுன் 11-ஆம் தேதி இருவரும் இணைந்து அனைவரையும் சந்திக்கிறோம் என்றார் விக்னேஷ் சிவன்.
விக்னேஷ் சிவன் – நயன்தாரா திருமணத்தை பிரபல இயக்குநர் கெளதம் மேனன் இயக்க உள்ளார். திருமண நிகழ்வுகள் நெட்பிளிக்ஸ் தளத்தில் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. இவர்களின் திருமணத்தில் ரஜினிகாந்த், அஜித் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.