அமெரிக்காவிற்கு வெளியே வணிகரீதியான ராக்கெட் ஏவுதலை நாசா நடத்த உள்ளது. இந்த ராக்கெட் ஏவுதலை, வடக்கு பிராந்தியத்தில் இருந்து சில வாரங்களில் ஆஸ்திரேலியா நடத்தும் என ஆஸ்திரேலிய பிரதமர் ஆன்டனி அல்பானிஸ் அறிவித்துள்ளார்.
இது தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பிரதமர், நுலுன்புய்க்கு அருகிலுள்ள ஆர்ன்ஹெம் விண்வெளி மையத்திலிருந்து ஆஸ்திரேலியா மூன்று ராக்கெட்களை அனுப்பும் என்று நான் அறிவித்துள்ளேன். அறிவியல் அமைச்சர் எட் ஹுசிக், மதல்வர் நடாஷா ஃபைல்ஸ் மற்றும் வடக்கு பிராந்திய தொழிலாளர் குழு இன்று டார்வினில் உள்ள அற்புதமான திட்டங்கள் பற்றி பேசினர்.
இந்த இலக்கை அடைந்தால் ஆஸ்திரேலியாவிற்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது என பிரதமர் ஆன்டனி அல்பானிஸ் தெரிவித்துள்ளார்.